திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலின் கனவை நினைவாக்க வரும் நடிப்பு அரக்கன்.. மீண்டும் ஆரம்பமாகும் மருதநாயகம்

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய மாறுபட்ட நடிப்பின் மூலம் பலரையும் மிரட்டிய கமல் கடந்த 1997 ஆம் ஆண்டு மருதநாயகம் என்ற சரித்திர புகழ்பெற்ற வீரரின் வாழ்க்கையை படமாக்க முன்வந்தார். அந்த காலத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக, ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் சில பல காரணங்களால் பாதியிலேயே நின்று போனது.

ஆனாலும் இந்தத் திரைப்படம் எப்போது தொடங்கும் என்று இன்றுவரை ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அப்போதைய காலகட்டத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகயுமே மிரள விட்டது. இந்திய அளவில் பலரும் வியந்து பார்த்த இந்த படத்தில் கமல்ஹாசனின் தோற்றமும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.

Also read : திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய 4 திரைப்படங்கள்.. வருட கணக்கில் காக்க வைக்கும் மருதநாயகம்

இந்நிலையில் இந்த பிரம்மாண்ட திரைப்படம் மீண்டும் கமல்ஹாசனின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் கமல் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இது பற்றி அவர் ஏற்கனவே பலமுறை பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். அதாவது மருதநாயகம் முயற்சி செய்தால் நிச்சயமாக உருவாகும். ஆனால் இப்போது நான் புதுப்புது தேடல்களை தேடி பயணித்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறினார்.

இதன் மூலம் அவர் இந்த திரைப்படத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைப்பார் என்று கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தில் விக்ரம் அல்லது சூர்யா இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு விக்ரமிற்கு தான் அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏனென்றால் தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பு என்று சொன்னால் அது கமல் மட்டும்தான். தற்போது அவர் அளவுக்கு நடிப்பில் அர்ப்பணிப்பை கொண்டு வரும் நடிகர் தான் விக்ரம். அதனால் இந்த மருதநாயகம் திரைப்படத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கமல் தரப்பு ஆலோசித்து வருகின்றது.

Also read : மீண்டும் தூசி தட்டப்படுமா மருதநாயகம்.. வெளிப்படையாக கூறிய கமல்ஹாசன்

தற்போது விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு கதை களத்தோடு உருவாகி வரும் இந்த திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று பலரும் கூறி வருகின்றனர். இதற்காக விக்ரமும் முழுமையாக தன்னை மாற்றிக் கொண்டு நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் கமலுடன் இணைய இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் கமலின் பல வருட கனவு விக்ரம் மூலம் நனவாக இருக்கிறது. தற்போது ஆண்டவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாகி உள்ளார். அதனால் இந்த மருதநாயகத்தை அவர் எப்போது இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் அதிகரித்துள்ளது.

Also read : அதிரேடியான தொடக்கம், வெளிவராமல் புஷ்னு போன 7 படங்கள்.. இப்பவும் இந்திய சினிமா எதிர்பார்க்கும் மருதநாயகம்

Trending News