செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கமல் நடிப்பில் ‘A’ சான்றிதழ் வாங்கிய 3 படங்கள்.. வாய்ப்பை விடாமல் ஒப்பு கொண்ட ஆண்டவர்

கமல் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த காலகட்டத்திலேயே அவர் நடித்த சில திரைப்படங்கள் ஏ சான்றிதழ்களை பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த காலத்தில் நடிகர்களுக்கு மிக குறைவான சம்பளம் தான் கொடுக்கப்பட்டு வந்தது.

அதனாலேயே அவர்கள் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி கமல் நடிக்க ஒப்புக்கொண்ட சில திரைப்படங்கள் ஏ சர்டிபிகேட்டையும் பெற்றிருக்கிறது. அந்த திரைப்படங்கள் ஓவர் கிளாமராக இருந்த காரணத்தினால் தான் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. அவை எந்தெந்த திரைப்படங்கள் என்று இங்கு காண்போம்.

Also read : கமலின் கனவை நினைவாக்க வரும் நடிப்பு அரக்கன்.. மீண்டும் ஆரம்பமாகும் மருதநாயகம்

மரியா மை டார்லிங்: கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் எடுக்கப்பட்டது. ஆக்சன் திரில்லராக இருந்த இந்த திரைப்படம் கொஞ்சம் கிளாமராகவும் அதே சமயம் வன்முறை நிறைந்த காட்சிகள் ஆகவும் இருந்தது.

அதன் காரணமாகவே இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க கர்நாடகாவிலேயே எடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களும் ஒரு மாத இடைவெளியில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Also read : அடுத்தடுத்து வரவிருக்கும் கமலின் 6 படங்கள்.. ரஜினியின் மார்க்கெட்டை உடைக்க தரமான 6 இயக்குனர்களுடன் கூட்டணி

பகடை பனிரெண்டு: தாமோதரன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து ஸ்ரீபிரியா, ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கப்பெற்றது. அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் பல கிளாமர் காட்சிகள் இடம் பெற்றது தான்.

விருதம்: 1987 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சுரேஷ் கோபி, ஷோபனா ஆகியோர் நடித்திருந்தனர். திகில் மற்றும் மர்மம் கலந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழைப் போலவே மலையாளத்திலும் கமலுக்கு ஏராளமான ரசிகர்கள் எப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read : இந்திய சினிமாவை மிரள வைத்த கமல்ஹாசனின் 6 படங்கள்.. இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த விக்ரம்

Trending News