திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மனநலம் குன்றிய நாயகனாக கமல் அசத்திய 5 படங்கள்.. பயத்திலேயே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த தெனாலி

கமலஹாசன் சினிமாவின் டிக்ஸ்னரி என்றே சொல்லலாம். இப்போதுள்ள நடிகர்களுக்கு கமல் ஒரு என்சைக்ளோபீடியாவாக இருக்கிறார். நடிகர், இயக்குனர், வசன கர்த்தா, பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். கமல் இதுவரைக்கும் பண்ணாத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம்.

1.16வயதினிலே: தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பதினாறு வயதினிலே. இந்த படத்தில் கமல் ‘சப்பாணி’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கிராமத்துக்கே உரிய வெள்ளந்தி மனிதனான சப்பாணியாகவும் , மயிலின் மேல் உயிரையே வைத்திருக்கும் கோபால கிருஷ்ணனாகவும் இன்றும் மனதில் நிற்கிறார்.

Also Read: கமல் நடிப்பில் ‘A’ சான்றிதழ் வாங்கிய 3 படங்கள்.. வாய்ப்பை விடாமல் ஒப்பு கொண்ட ஆண்டவர்

2.ஜப்பானில் கல்யாணராமன்: ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படம் 1985ஆம் ஆண்டு எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், ராதா, சத்யராஜ் ஆகியோர் நடித்த திரைப்படம். இந்த படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். 1979 ஆம் ஆண்டு வெளியான கல்யாணராமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

3.குணா: 1991 ஆம் ஆண்டு சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் குணா. இந்த படத்தில் ரேகா, ரோஷினி, ஜனகராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். விலை மாதுவாக இருக்கும் தன் தாயையும், உறவினர்களையும் வெறுக்கும் கமல் தன்னுடைய கற்பனையில் வரும் பெண்ணின் மீது அதிக காதல் கொண்டவராக நடித்திருப்பார்.

Also Read: இயக்குனராக வெற்றி கண்ட உலகநாயகன்.. சினிமாவை கத்துக்க மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 படங்கள்

4.தெனாலி: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தெனாலி. ஜெயராம், ஜோதிகா, தேவயானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இலங்கை உள்நாட்டு போரினால் அதிர்ச்சிக்குள்ளாகி எதை கண்டாலும் பயப்படும் மனநோயாளியாக கமல் இதில் நடித்திருப்பார்.

5.ஆளவந்தான்: 2000 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ஆளவந்தான். கிட்டத்தட்ட சிகப்பு ரோஜாக்கள் கதையை தழுவி வந்த திரைப்படம் இது. சின்ன வயதிலேயே சித்தி கொடுமையை அனுபவிக்கும் கமல் பெண்களையே வெறுக்கிறார். மேலும் பார்க்கும் பெண்களை எல்லாம் தன் சித்தியாக நினைத்து கொலை செய்யும் மனநோயாளியாக மாறுகிறார்.

Also Read: இந்திய சினிமாவை மிரள வைத்த கமல்ஹாசனின் 6 படங்கள்.. இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த விக்ரம்

Trending News