இந்த வருடம் நடிகர் கார்த்திக்கு அமோகமாக இருக்கிறது. அவர் நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து, வசூலிலும் சாதனை பெற்றது. அதிலும் தீபாவளிக்கு வெளிவந்த சர்தார் திரைப்படம் நூறு கோடி வரை வசூலித்துள்ளது. இதனால் கார்த்தி தற்போது பயங்கர பிசியாக மாறி இருக்கிறார்.
இவரிடம் கதை சொல்வதற்காக இயக்குனர்கள் பலரும் வரிசை கட்டி நிற்கின்றனர். அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் 2, கைதி 2 போன்ற படங்களுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கார்த்தி ஏற்கனவே கதை கேட்டு ஓகே செய்து வைத்திருந்த ஒரு திரைப்படத்தை வருட கணக்கில் தள்ளிப் போட்டதால் இயக்குனர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.
Also read: அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான கார்த்தி.. எம்ஜிஆராக எடுக்கும் புது அவதாரம்
குக்கூ, ஜோக்கர் போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் ராஜு முருகன் தற்போது கார்த்தியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே இது குறித்த அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த படம் எப்போது தொடங்கப்படும் என்று யாருக்கும் தெரியவில்லை.
அதற்கிடையில் கார்த்தியின் நடிப்பில் உருவான படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தது. இப்படியே ஒரு வருடம் சென்றது. இதை அடுத்து ராஜுமுருகன் அவரிடம் மீண்டும் இந்த திரைப்படத்தை ஆரம்பிப்பது பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் ராஜமுருகனுக்கு உடல் நல பிரச்சனை இருந்த காரணமாக சிறிது காலம் இந்த படப்பிடிப்பு தள்ளிப் போனது. அதன் பிறகு கார்த்தி கொஞ்சம் பிசியாக மாறிவிட்டார்.
Also read: கார்த்தியின் கேரியரை சறுக்கலில் தள்ளிய 5 படங்கள்.. சர்தார் வரை துரத்திய பிரச்சனை
மேலும் கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. இதனால் அவரை பிடிப்பதே இயக்குனருக்கு குதிரைக்கொம்பாக இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட இந்த படத்துக்காக ராஜு முருகன் ஒரு வருடம் காத்திருக்கிறார். ஆனால் கார்த்தி பல படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தை ஆரம்பிப்பதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டது. அடுத்தடுத்த வெற்றியால் கார்த்தி ராஜூ முருகனை கண்டுக்காமல் போய்விட்டதாகவும் திரை உலகில் கிசுகிசுக்கப்பட்டது.
அதனால் இன்னும் எத்தனை மாதம் காத்திருக்க வேண்டுமோ என்று நொந்து போயிருந்த இயக்குனருக்கு கார்த்தியின் மூலம் ஒரு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. அதாவது கார்த்தி, ராஜுமுருகன் கூட்டணியில் உருவாகும் ஜப்பான் திரைப்படம் தற்போது பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது. அனு இம்மானுவேல் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனால் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ராஜு முருகன் விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடியில் ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Also read: கார்த்தி நடிக்கப் போகும் நான்கு பார்ட் 2 படங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய மெகா கூட்டணி