பிக் பாஸில் VJ மகேஸ்வரி வாங்கிய சம்பளம்.. 35 நாட்களுக்கு இவ்வளவா?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று விஜே மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். தேவையில்லாத சண்டை மற்றும் முன்கோபம் காரணமாக ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்த மகேஸ்வரி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் விஜேவாக பல தொலைக்காட்சிகளில் மகேஸ்வரி பணியாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்க பல தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அதிலும் பெரும்பாலும் விஜய் டிவி தொடர்களில் மகேஸ்வரி நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக மகேஸ்வரி நடித்திருந்தார். தனது சொந்த வாழ்க்கையில் மகேஸ்வரி பல இன்னல்களை சந்தித்துள்ளார். அதாவது தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தால் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்துள்ளார்.

தனது தாய்க்கு பண உதவி செய்யக்கூடாது என கணவர் பிடிவாதகமாக இருந்ததால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் தனது கணவனிடம் விவாகரத்து பெற்ற ஒரு தனி பெண்ணாக தனது மகனை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 35 நாட்கள் பயணித்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 23 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதனால் சுமார் 8 லட்சத்துக்கு அதிகமாக பிக் பாஸ் வீட்டில் மகேஸ்வரி சம்பாதித்துள்ளார்.

மேலும் மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ளும் மகேஸ்வரி இன்னும் சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்திருக்கலாம் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →