வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத 6 சக்சஸ்ஃபுல் ஹீரோக்கள்.. ஆனா இப்ப பல நூறு கோடி சொத்து மற்றும் சம்பளம்

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் நாம் அனைவருக்கும் விருப்பமான முன்னணி நடிகர்களின் பலர் பட்டப் படிப்பு படிக்காதவர்கள், ஒரு சிலர் கல்லூரியின் வாசலையே மிதிக்காதவர்கள் என்று சொல்லலாம் அப்படியிருந்தும் தங்களது திறமையால் இன்று ரசிகர்களின் பிரியமானவர்களாக வலம் வரும் ஆறு தமிழ் நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் நடிப்பதற்காக ரயில் ஏறி வந்தவர். ரஜனிகாந்த் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். அந்த காலத்தில் பியூசி அதாவது பத்தாம் வகுப்பு முடித்து சென்னையில் வந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது பிலிம் இன்ஸ்டியூட்டில் இணைந்து தனது நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டவர். கல்லூரி வாசலை மிதிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைக்கு பல கோடி ரூபாய் சொத்துக்கள் சம்பாதித்து இந்தியாவிலேயே முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

உலகநாயகன் கமலஹாசன் : கமலஹாசன் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் 10ஆம் வகுப்பு படித்த நிலையில் தொடர்ந்து கல்லூரிக்கு செல்லாமல் ஹீரோவாக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர். இன்றுவரை பல திரைப்படங்களில் நடித்து வரும் கமலஹாசன் தனது தந்தையின் ஊக்கத்தின் பெயரில் பைன் ஆர்ட்ஸ் படிப்பு படித்தவர். கமலஹாசன் இன்று இந்தியாவிலேயே அதிக விருதுகள் வாங்கிய நடிகர் என்ற பெருமை பெற்றவர்.

Also Read : 2022ல் மெர்சல் செய்த டாப் 5 ஹீரோக்கள்.. அஜித், விஜய்யை ஓரங்கட்டி தண்ணி காட்டிய தமிழ் நடிகர்

விஜய் : நடிகர் விஜய் தனது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்த விஜய், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப் படிப்பில் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களிலேயே விஜய் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நடிப்பில் ஆர்வம் காட்டினார், இன்று தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தை பிடித்தவர்.

அஜித் : ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் அஜித் கார் ரேஸ், பைக் ரேஸ் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர். தனது வசீகரமான முகத்தால் முதலில் மாடலிங்கில் ஈடுப்பட்ட நடிகர் அஜித் 10ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியைத் தொடரவில்லை. பைக் மெக்கானிக்காக சில வருடங்கள் பணிபுரிந்தார். இன்று பைலட் லைசன்ஸ் வாங்கும் அளவிற்கு தனது திறமைகளை நடிகர் அஜித் உயர்த்தி, பலருக்கும் பிடித்த நடிகராக வலம் வருகிறார்..

Also Read : வயசுக்கு தகுந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் 5 நடிகர்கள்.. இன்றுவரை ரஜினியை மட்டும் ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள்

பிரஷாந்த் : நடிகர் பிரஷாந்த்தின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜனின் இயக்கத்தில் அறிமுகமானார். மருத்துவராக வேண்டும் என்ற கனவு கண்ட நடிகர் பிரஷாந்த். தனது பள்ளிப்படிப்பை முடித்த பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பை பார்த்து ரசித்த ரசிகர்கள் பிரசாந்த்தை ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர். அதன்பின் நடிகர் பிரசாந்த் லண்டனில் உள்ள கல்லூரியில் சென்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படிப்பை படித்தார்.

பிரபு : நடிகர் பிரபு பெங்களூரில் உள்ள பள்ளியில் படித்த நிலையில், சென்னை லயோலா கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை படித்துக் கொண்டிருந்தார். அப்போது திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தினார். தற்போது பல முன்னணி ஹீரோக்களின் அண்ணன், தந்தை என துணை நடிகராக அசத்தி வருகிறார்.

Also Read : தன்னை கலாய்த்தவரை வீட்டுக்கு கூப்பிட்டு பாராட்டிய சூப்பர் ஸ்டார்.. பெரிய மனுஷனாக நடந்து கொண்ட ரஜினி

Trending News