திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினிக்கு 3 பெக்கில் ஏறாத போதை.. தெளிய தெளிய அடித்த கமல் கதாபாத்திரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் மது மற்றும் சிகரெட் ஆகியவற்றிற்கு அடிமையாக இருந்தார். அந்தச் சமயத்தில் ரஜினியின் குருவான இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் நாகேஷை ஒப்பிட்டு ரஜினிக்கு அறிவுரை கூறியுள்ளார். அதன் பின் குடிப்பதையே ரஜினி நிறுத்தி விட்டார்.

அதுமட்டுமின்றி ஒரு ராகவேந்திர பக்தராக ஆன்மீகவாதியாகவே மாறி எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு விட்டார். இந்நிலையில் இயக்குனர் பி வாசு ரஜினியின் மன்னன், சந்திரமுகி போன்ற படங்களை இயக்கியுள்ளார். எப்போதுமே இவர்களுக்குள் ஒரு சுமூக நட்பு இருந்து வருகிறது.

Also Read : நடிக்க முடியாமல் போன ரஜினி, நஷ்டத்தை ஈடு கட்டிய பெரிய மனுஷன்.. இப்பவும் ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்

ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பெயரை கூறியவுடன் பி வாசு அவரைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது கமலின் நாயகன் படத்தைப் போல நீங்கள் ஒரு படம் பண்ணலாமே என பி வாசு ரஜினி இடம் ஒரு முறை கேட்டாராம்.

அதற்கு ரஜினி நாயகன் படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து 3 பெட் அடித்தேன். அப்போதும் எனக்கு போதை ஏறவே இல்லை. அந்த அளவுக்கு நாயகன் படத்தின் போதை எனக்குத் தெரியவில்லை என்று கமலிடம் சொன்னதாக பி வாசு இடம் ரஜினி கூறி உள்ளார்.

Also Read : ரஜினிகாந்த் கால்சீட்டையே அலசி ஆராயும் தயாரிப்பாளர்.. பிரதீப் ரங்கநாதனை விரட்டி விட்ட பரிதாபம்

அந்த அளவுக்கு கமலின் வேலு நாயக்கர் கதாபாத்திரம் ரஜினியை மிகவும் கவர்ந்துள்ளது. தனக்கு போட்டியாக இருக்கும் கமலின் படத்தை ஒரு நடிகர் இவ்வாறு புகழ்ந்து பேசுவது மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக பி வாசு கூறியுள்ளார். மேலும் ரஜினியை பற்றி நான் மிகையாக எதுவும் சொல்லவில்லை.

அவர் இயல்பாகவே ஒரு நல்ல குணமுடையவர். மேலும் ரஜினியின் கண்களைப் பார்த்தே அவர் என்ன யோசிக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக எனக்கு தெரியும் என பி வாசு அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இன்றும் காலத்தால் அழியாத படங்களில் நாயகனும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

Also Read : கிண்டல் செய்தவரை வாழ்ந்துட்டு போ என கூப்பிட்டு பாராட்டிய ரஜினி.. கண்கலங்கிய இளம் ஹீரோ!

Trending News