சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு தேசியவிருது கிடைப்பது கொஞ்சம் கடினம். இதற்க்கு பெரிய காரணாமாக சொல்லப்படுவது அவர்கள் சொந்தக்குரலில் டப்பிங் செய்வதில்லை. அதையும் தாண்டி தங்களுடைய சிறந்த நடிப்பினால் தேசிய விருதை வாங்கியிருக்கிறார்கள். தேசிய விருதை ஒருமுறை வாங்குவதே பெரிய கஷ்டமாக இருக்க, நடிகைகள் இருவர் இரண்டு முறை தேசிய விருதை வாங்கியிருக்கிறார்கள்.
சோபனா: நடிகை சோபனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர். குறுகிய நாட்களிலேயே கமல், ரஜினி போன்ற டாப் ஸ்டார்களுக்கு ஜோடியாகி விட்டார். தளபதி படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் கூறியிருந்தார்.
1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மணிசித்திரதாழ். இந்த படத்தின் தழுவல் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படம். இந்த படத்திற்காக முதன்முறையாக தேசியவிருது வாங்கினார்.
நடிகை ரேவதியின் இயக்கத்தில் சோபனா நடித்த திரைப்படம் மித்ர் மை பிரண்ட். இது ஆங்கில மொழி திரைப்படம் ஆகும். இந்த படத்திற்காகவும் நடிகை சோபனாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியது சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா ஆகும்.
அர்ச்சனா : 1980 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் அர்ச்சனா. இவர் கதக் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞரும் ஆவார். சமீபத்தில் அர்ச்சனா சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் சிவாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
1988 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன வீடு திரைப்படத்திற்க்காக தான் அர்ச்சனா முதன் முதலில் தேசிய விருது வாங்கினார். இந்த படத்தில் கதை, இயக்கம், ஒளிப்பதிவு, தொகுப்பு என அனைத்தையும் இயக்குனர் பாலுமகேந்திரா தான் செய்தார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு சொந்த வீடு கட்ட முயற்சிப்பது தான் இந்த படத்தின் கதை.
முதல் தேசிய விருது வாங்கிய அடுத்த வருடமே அர்ச்சனா தாசி என்னும் தெலுங்கு படத்திற்காக தேசிய விருது வாங்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் அர்ச்சனா நடிகர் தனுஷின் பரட்டை என்கிற அழகுசுந்தரம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார்.