புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிரின்ஸ் கொடுத்த பெரிய அடி.. சிங்கிளாக களமிறங்கும் அயலான்

டாக்டர், டான் படத்தின் மூலம் 100 கோடிக்கு மேல் வசூலை மாறி குவித்த சிவகார்த்திகேயனுக்கு தீபாவளியை முன்னிட்டு வெளியான பிரின்ஸ் படம் படு தோல்வியை தந்தது. ஆகையால் அவருடைய அடுத்த படமான அயலான் படத்தை எந்தப் போட்டியும் இல்லாத சமயத்தில் சிங்களாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் துவங்கிய அயலான் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இப்படம் பட்ஜெட் பிரச்சனை கிராபிக்ஸ் பணிகள் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனைத் தொடர்ந்து அயலான் படக்குழு முடிவெடுத்துள்ளனர்.

Also Read: விரைவில் ரெடியாகும் பொன்ராம் யூனிவெர்ஸ்.. இணையப்போகும் போஸ் பாண்டி, ரஜினி முருகன்

சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு 2 ரிலீஸ் தேதிகள் படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படம் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணியில் உருவானதாகும். சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக ஏறியது. சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா அயலான் படத்தை தயாரித்து வந்தார். பட்ஜட் பிரச்சினை காரணமாக அதிலிருந்து விலக கே ஜி ஆர் நிறுவனம் படத்தை கைப்பற்றி எடுத்து முடித்தது.

Also Read: புகழ் போதையில் நன்றி மறந்து சிவகார்த்திகேயன்.. தம்பி பிரதீப் பார்த்து கத்துக்கோங்க ப்ரோ!

இப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று முடிந்தாலும் கிராபிக்ஸ் பணிகள் மட்டும் தாமதமாகிக் கொண்டே போனது. இந்நிலையில் அயலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 24 அல்லது 25 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பொங்கலுக்கு விஜய், அஜித், தனுஷ், சிம்பு மற்றும் ரஜினியின் படங்கள் வரிசை கட்டி நிற்பதால் சிவகார்த்திகேயன் தனது படத்தை மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார். அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியன் ஆக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அயலான் தான் தமிழில் முதல் ஏலியன் திரைப்படமாக இருக்கலாம்.

Also Read: எங்களுக்கு தோண்டிய குழியில நீயே விழுந்துட்ட.. மேடையில் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

Trending News