ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரட்சிதாவை சைட் அடித்ததற்கு இத்தனை கோடியா?. ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸில் வாங்கிய சம்பளம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 50 நாட்களைக் கடந்துள்ளது. ஆனால் இன்னும் ஆட்டம் சூடு பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு சிலரைத் தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் யாரும் தனித்துவமாக விளையாடவில்லை.

இதை நேற்று கமல் எபிசோடில் போட்டியாளர்களுக்கு புரியும்படி அறிவுரை கூறியுள்ளார். ஆகையால் இனியாவது தங்களது விளையாட்டை தனியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் கடந்த வாரம் நிவாஷினியை தொடர்ந்த இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.. அடித்து சொல்லும் நட்சத்திர ஜோடி

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே வெளியில் செல்ல வேண்டும் என ராபர்ட் மாஸ்டர் சொல்லிக் கொண்டே இருந்ததால் இவரது எலிமினேஷனில் யாருக்கும் அவ்வளவு வருத்தம் இல்லை. ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல லீலைகளை அரங்கேற்றி உள்ளார் ராபர்ட் மாஸ்டர்.

அதாவது சின்னத்திரை நடிகையான ரட்சிதாவை ரொமான்ஸ் செய்து கொண்டு மூக்குத்தி என்ற செல்லமாக அழைத்து வந்தார். சில சமயம் அவரை கட்டிப்பிடிப்பது என எல்லை மீறி போக ரட்சிதா அவரிடம் இருந்து விலகி விட்டார். ஆனாலும் ராபர்ட் மாஸ்டர் அவரை விடுவதாக இல்லை.

Also Read : கேள்விகளால் போட்டியாளர்களை திணறவிட்ட ஃபேன்ஸ்.. கமலே அசந்து பார்த்த பிக்பாஸ் சுவாரசியம்

அதாவது தொடர்ந்து ரட்சிதாவிடம் காதல் விளையாட்டுகளை அரங்கேற்றி வந்தார். இதற்கு ரட்சிதா சம்மதம், மறுப்பு என எதுவுமே தெரிவிக்காமல் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பள விபரம் வெளியாகி உள்ளது.

ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரத்திற்கு 1.5 கோடியில் இருந்து 2 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதன்படி 6 வாரங்கள் பிக் பாஸில் தாக்கு பிடித்த ராபர்ட் மாஸ்டருக்கு 12 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ரட்சிதாவை சைட் அடித்ததற்கு இவ்வளவு சம்பளமா என பலரும் இதைப் அறிந்து வாயைப் பிளக்கின்றனர்.

Also Read : தேரை இழுத்து தெருவுல விட்ட மாமியார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

Trending News