சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

1300 எபிசோட், கிளைமாக்சை நெருங்கிய முக்கிய சீரியல்.. இவ்வளவு உருட்டியும் பத்தல, கவலையில் நடிகர்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை விட சீரியல்களைத் தான் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். அதிலும் இல்லத்தரசிகளுக்கான ஒரு பொழுதுபோக்கு அம்சமே இந்த சீரியல்கள் தான். அதனாலேயே பல சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

அதில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தான் எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. பல வருடங்களாக இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சன் டிவி சில சீரியல்களை ஆயிரம் எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. அதில் ரோஜா சீரியல் தான் எப்போதுமே முன்னணியில் இருந்து வருகிறது.

Also read: வெளியானது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்.. கதறி அழும் பாரதி

கிட்டத்தட்ட 1300 எபிசோடுகளை கடந்திருக்கும் இந்த சீரியல் நான்கு வருடங்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக்சன், சென்டிமென்ட், லவ், ரொமான்ஸ் என்று பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியல் தற்போது கிளைமாக்ஸை நெருங்கி இருக்கிறது. விரைவில் முடிய போகும் இந்த சீரியலை நினைத்து ரசிகர்கள் கவலை கொண்டாலும் அடுத்த தரமான சீரியலுக்காக காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் ரோஜா சீரியலின் ஹீரோவாக அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபு சூரியன் உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, இது ஒரு அழகான பயணம். நான்கு வருடங்களுக்கும் மேலாக இந்த சீரியல் மூலம் அதிகமான நினைவுகளும், ஏராளமான அன்பும் கிடைத்திருக்கிறது.

Also read: ஆலியா மானசா மட்டுமல்ல சூப்பர் ஹிட் இயக்குனரை வளைத்து போட்ட சன் டிவி.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

இன்று ரோஜா சீரியலில் என்னுடைய பகுதியின் கடைசி காட்சி படமாக்கப்பட்டுள்ளது. என்னை நம்பி அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தை கொடுத்த சரிகம நிறுவனத்திற்கும், சன் டிவிக்கும் எனது நன்றி. மேலும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் நான் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இத்தனை வருடங்களாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கிட்டத்தட்ட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து வந்த சிபு சீரியல் முடிந்ததில் சற்று கவலையாக தான் இருக்கிறார். இருப்பினும் ரசிகர்கள் அவரை அடுத்த சீரியலில் காண காத்திருக்கிறோம் என்று அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். இந்த சீரியல் முடிந்த பிறகு ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் முக்கிய பிரபலம் நடித்துள்ள சீரியல் ஒன்று விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also read: எப்பா சாமி இப்பவாவது முடிவுக்கு வந்தீங்களே.. பாரதி கண்ணம்மாவில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

Trending News