1. Home
  2. எவர்கிரீன்

ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் கலக்கிய 5 ஹீரோக்கள்.. விஜய்க்கு செட்டாகாத நெகட்டிவ் கதாபாத்திரம்

ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் கலக்கிய 5 ஹீரோக்கள்.. விஜய்க்கு செட்டாகாத நெகட்டிவ் கதாபாத்திரம்
பெரிய ஹீரோக்கள் ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

சாதாரணமாக ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடிப்பது சகஜம் தான். ஆனால் அந்த இரட்டை கதாபாத்திரத்திலும் மாறுபட்டு நடிப்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த வகையில் சில ஹீரோக்கள் வில்லன், ஹீரோ என்று ஒரே படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்த நடிகர்கள் மற்றும் படங்களை இப்போது பார்க்கலாம்.

ரஜினி : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் டாக்டர் வசீகரனாக பாசிட்டிவ் கதாபாத்திரத்திலும் சிட்டி என்ற ரோபோ கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ஆகவும் ரஜினி நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார்.

கமல் : கமல் எத்தனை கதாபாத்திரம் கொடுத்தாலும் எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டக்கூடியவர். தசாவதாரம் படத்தில் கூட பத்து கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் ஆளவந்தான் படத்தில் கமல் ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சத்யராஜ் : பொதுவாக சத்யராஜ் ஹீரோவை காட்டிலும் வில்லன் கதாபாத்திரங்களில் பின்னி பெடல் எடுக்க கூடியவர். இவர் பல படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் சத்யராஜ் நடிப்புக்கு சரியான தீனி போட்ட படம் அமைதிப்படை. இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என நடித்து அசத்தி இருப்பார்.

அஜித் : அஜித் மங்காத்தா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான வாலி படத்தில் தான் அஜித் சிவா மற்றும் தேவா என ஹீரோ, வில்லன் என்று மாறுபட்ட கதாபாத்திரத்தை ஒரே திரையில் காண்பித்திருப்பார். இந்த படம் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது.

விஜய் : தளபதி விஜய் மெர்சல், கத்தி போன்ற படங்களில் பல வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என்று இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் விஜய்க்கு நெகட்டிவ் கதாபாத்திரம் செட்டாகாத காரணத்தினால் இந்த படம் தோல்வியை சந்தித்தது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.