திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வன்மத்துடன் கட்டம் கட்டிய போட்டியாளர்கள்.. தரமான பதிலால் நோஸ்கட் செய்த அசீம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களுக்கு தான் அதிக பார்வையாளர்கள் இருக்கின்றனர். ஏனென்றால் கடந்த சில தினங்களாகவே படு மொக்கையாக சுவாரசியம் இல்லாமல் நகரும் இந்த நிகழ்ச்சி கமல் வரும் இரண்டு நாட்களில் தான் களை கட்டுகிறது. அதனால் வார இறுதி நாட்களில் விஜய் டிவியின் டிஆர்பியும் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்று போட்டியாளர்களை கமல் நன்றாக வறுத்து எடுத்தார். அதிலேயே நொந்து போயிருந்த போட்டியாளர்களுக்கு இன்றும் சரியான கச்சேரி நடந்திருக்கிறது. அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோக்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவும் அசத்தலாக இருக்கிறது.

Also read: தனலட்சுமிக்கு போட்டியாக வரும் அடுத்த சோசியல் மீடியா பிரபலம்.. பிக் பாஸில் களமிறங்கும் வைல்டு கார்டு என்ட்ரி

அதில் ஆண்டவர் போட்டியாளர்களிடம் உங்களுடைய பாப்புலாரிட்டி லெவல் மக்களை பொருத்தவரை எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். மேலும் அங்கு பெரிய பச்சை நிற பெட்டியும், சிறு சிகப்பு நிற பெட்டியும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒவ்வொருவரும் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்பதையும் அவர்களுடைய போட்டோவையும் பச்சை நிற பெட்டியில் வைக்க வேண்டும்.

அதேபோன்று மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர் என்று நினைப்பவர்களின் போட்டோவை சிவப்பு நிற பெட்டியில் வைக்க வேண்டும். இந்த விளையாட்டில் பலரும் விக்ரமனை தான் மக்கள் விரும்புவார்கள் என்றும் அவருக்கு தான் அதிக சப்போர்ட் என்றும் கூறியிருந்தனர்.

Also read: அசீமை படுகேவலமாக திட்டிய ஆண்டவர்.. காரசாரமான பிக்பாஸ் மேடை

அதைத்தொடர்ந்து அமுதவாணன், தனலட்சுமி, அசீம் ஆகியோர் மக்களால் வெறுக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தனர். அதில் வழக்கம் போல விக்ரமன், அசீம் பெயரை தான் கூறியிருந்தார். சமீப காலமாக விக்ரமன் அசீமை மட்டும்தான் டார்கெட் செய்து வருகிறார். அவருடன் சேர்ந்து கொண்டு ராம் உள்ளிட்ட பலரும் தங்கள் வன்மத்தை வெளிப்படையாக காட்டி வருகின்றனர்.

இதனாலேயே அசீமுக்கு சோசியல் மீடியாவில் ஆதரவு பெருகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கமல் போட்டியாளர்களின் கருத்து பற்றி அசீமிடம் கேட்டார். அதற்கு அவர் மக்கள் என்னை நிச்சயம் வெறுக்க மாட்டார்கள் என்று கூறினார். உடனே பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டுவது போல் ப்ரோமோ முடிகிறது. இதிலிருந்து அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்று தெரிகிறது. தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

Also read: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆடியன்ஸ்.. இந்த வாரம் உறுதியாக வெளியேறும் டம்மி பீஸ்

Trending News