தமிழ் சினிமாவிற்கு கமர்ஷியல் ரீதியாக எத்தனையோ படங்கள் வெளி வந்தாலும் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில், புகழ்பெற்ற பெற்ற நாவலை அடிப்படைக்காக கொண்டு பல உண்மை சம்பவங்களை படமாக்கியுள்ளனர். அதில் சிறந்த 10 படங்களின் லிஸ்ட் ஆகி உள்ளது. இதில் டாப் இடத்தை ஜெய் பீம் பிடித்திருக்கிறது.
கர்ணன்: 2021 ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வி கிரியேஷன் நிறுவனம் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஆகும். இதில் தனுஷ், யோகி பாபு, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1995 ஆம் ஆண்டு கொடியன் குளம் ஜாதி கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட அமைந்துள்ளது.
ஒரு குறிப்பிடபடும் கீழ் சமூகத்தினர், மேல் சமூகத்தினரால் மேல் சமூகத்தை சார்ந்த அரசாங்க அதிகாரிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நாயகன் தன் மக்களுக்காகவும் தன் இனத்தின் உரிமைக்காக போராடுவது போன்று இக்கதை அமைந்துள்ளது. கர்ணன் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களின் வரிசையில் 6-வது இடத்தில் உள்ளது.
Also Read: 6 உச்ச நட்சத்திரங்களூடன் நடித்த ஒரே நடிகை.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் விட்ட ஜொள்ளு
பொன்னியின் செல்வன்: 2022 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் நடிப்பையும் தாண்டி அதன் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கி எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரு பாகங்களாக உருவாக்கியுள்ளது. முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அதன் 2-வது பாகம் தயார் நிலையில் உள்ளது. புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான சிறந்த 10 படங்கள் வரிசையில் பொன்னியின் செல்வன் 5-வது இடத்தில் உள்ளது.
அசுரன்: 2019 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் தனுஷ் உடன் மஞ்சு வாரியர் முதல் முறையாக தமிழில் நடித்துள்ளார். பூமணி எழுதிய வெக்கை என்னும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான அசுரன் மிகவும் அழுத்தமான சமூக கருத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும்.
அசுரன் படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது. படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்களால் கொண்டாட கூடிய விதத்தில் அமைந்துள்ளது. அசுரன் திரைப்படம் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான சிறந்த 10 படங்கள் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
Also Read: போலீஸ் கதாபாத்திரத்தில் வெற்றிகண்ட 10 ஹீரோக்கள்.. சத்திரியனுக்கு சாவே இல்ல என மிரட்டிய விஜயகாந்த்
தீரன் அதிகாரம் ஒன்று: 2017 ஆம் ஆண்டு இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளிவந்த பரபரப்பான காட்சிகளுடன் கூடிய எதிர்பார்ப்பூட்டும் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்தி, ராகுல் ப்ரீத்தி சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு, கர்நாடக மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆயுதமேந்திய வட இந்தியாவின் பவாரியா இனத்தினர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் திட்டங்களை எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படமானது கொள்ளையர்களின் கொடூர நடவடிக்கைகளையும் தமிழ்நாடு காவல்துறையின் தீவிரமான நடவடிக்கை தொடர்புடைய படமாகும். கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
சூரரைப் போற்று: 2020 ஆம் ஆண்டு பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, அபர்ணா பால முரளி, ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூரரைப் போற்று கதையானது ஏர் டெக்கான் வானூர்தி நிறுவனத்தைத் துவங்கியவரான கோ.ரா. கோபிநாத்தின் வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சூர்யா மாறா என்ற கதாபாத்திரத்தில் விமானப்படையின் முன்னாள் கேப்டனாக மிக அருமையாக நடித்திருப்பார்.
கோபிநாத் தான் எதை செய்ய வேண்டும் என்று கனவு கண்டாரோ அதை தனது விடாமுயற்சியின் மூலம் அதனை வெற்றி அடைய செய்தார் .சூரரைப் போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் அனைவரது பாராட்டையும் பெற்றது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
ஜெய் பீம்: 2021 ஆம் ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது 1993 ஆம் ஆண்டில் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவத்தின் அடிப்படையில் இருளர் பழங்குடியின மக்களான செங்கேணி மற்றும் ராஜ கண்ணு தம்பதியின் வாழ்க்கையில் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினரால் அநீதி ஏற்பட்டு பிறகு எவ்வாறு அதற்கான நீதியை பெறுகிறார்கள் என்பது படத்தின் கதை.
சூர்யா நடிப்பில் சந்துருவின் கதாபாத்திரம் பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காண்பித்து அனைவராலும் பாராட்டக்கூடிய விதத்தில் அமைந்தது. மேலும் இப்படம் வசூல் சாதனை படைத்த மாபெரும் வெற்றி பெற்றது. ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளது.
Also Read: டாப் 10 சயின்டிஃபிக் மூவிஸ்.. சீனர்களையும் வியக்க வைத்த போதிதர்மர்
இதனைத் தொடர்ந்து டேக் ஆஃப் என்கின்ற மலையாளத் திரைப்படம் 7-வது இடத்திலும், சைரா நரசிம்மா ரெட்டி என்கின்ற தெலுங்கு திரைப்படம் 8-வது இடத்திலும், கில்லிங் வீரப்பன் என்கின்ற கன்னட படம் 9-வது இடத்திலும், விசாரணை 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.