ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அதிர்ஷ்டத்தால் தப்பித்த போட்டியாளர்.. ஆண்டவரின் அதிரடியால் மிரண்டு போன ஹவுஸ் மேட்ஸ்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வார இறுதி நாளில் மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கிறது. மற்றபடி போட்டியாளர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டும், வாக்குவாதம் செய்து கொண்டும் இருப்பதால் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதுவரை வந்த சீசன்களிலேயே இதுதான் மொக்கையான சீசன் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று சொல்லப்பட்ட நிலையில் நேற்று ராம் வீட்டை விட்டு வெளியேறினார். இதுவரை ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் மட்டுமே வீட்டுக்குள் இருந்து வந்த அவர் இப்போதாவது வெளியேறினாரே என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் இருக்கிறது.

Also read: மைனாவுக்கு லட்சக்கணக்கில் வாரி கொடுக்கும் பிக்பாஸ்.. ஒரு நாள் சம்பளமே இவ்வளவா!

அவரைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் ஆயிஷாவின் வெளியேற்றம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களிடம் இந்த வீட்டில் அதிர்ஷ்டத்தால் மட்டுமே தப்பித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர் யார் என்று கேட்கிறார். அதற்கு பலரும் ஜனனியின் பெயரை கூறுகின்றனர்.

இலங்கையிலிருந்து வந்திருக்கும் இவரை ஆரம்பத்தில் அனைவருக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் போகப் போக எதற்கெடுத்தாலும் கோபம், பொறாமை, புறணி பேசுவது என்று இருந்த இவரை யாருக்கும் பிடிக்காமல் போனது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ரட்சிதா பற்றி கூறியிருந்த ஒரு கருத்தும் சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

Also read: ராம் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரகுவரன் கெட்டபுக்காகவே வாரி வழங்கிய விஜய் டிவி

அதனால் இவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கருத்துக்களும் அதிகரித்தது. இந்நிலையில் போட்டியாளர்கள் அவரை அதிர்ஷ்டத்தால் மட்டுமே இருக்கிறார் என்று கூறியதை கேட்டு ஜனனி சந்திரமுகியாகவே மாறிவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் தன்னை பார்த்து கூறிய ரட்சிதாவை அதிர்ஷ்டத்தால் இந்த வீட்டில் இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

உடனே கமல் அவர் இந்த வீட்டில் அதிர்ஷ்டத்தால் இருக்கிறார் என்று சொல்லும் நீங்களே அதிர்ஷ்டத்தால் இருக்கிறீர்கள் என்று நிறைய பேர் கூறி விட்டார்கள் என குத்தலாக சொல்கிறார். இதைக் கேட்டு வாயடைத்து போன ஜனனி அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பது போல் ப்ரோமோ முடிகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஜனனியை ஆண்டவர் நன்றாக ரோஸ்ட் செய்ய இருக்கிறார்.

Also read: களை கட்டிய டபுள் எவிக்சன்.. உறுதியாக அந்த ரெண்டு வேஸ்ட் பீஸ்களை தூக்கி வெளியில் போடும் பிக்பாஸ்

Trending News