விஷாலின் பேராசையால் எல்லாம் மண்ணா போச்சு.. பிரபுதேவாவுக்கு செய்த துரோகம்

சில மாதங்களாக பெரிய அளவில் எந்த சர்ச்சையிலும் சிக்காத விஷால் இப்போது அடுத்த அடுத்த சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்த இவர் இப்போது விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போகிறேன் என்று பேசி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அந்தப் பிரமோஷனுக்காகவே இவர் தற்போது விஜய் பெயரை பயன்படுத்தி வருவதாக கருத்துக்கள் கிளம்பியுள்ளது. அது மட்டுமில்லாமல் இவர் இப்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே ஒருமுறை தேர்தலில் சுயேசையாக போட்டியிட முயற்சி செய்தார். ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது.

Also read: ஊர் ஊராக அலையவிடுறாங்க.. உதயநிதியிடம் முதல் கோரிக்கை வைத்த சங்க தலைவர் விஷால்

நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷால் அந்த கட்டிடத்தை கட்டுவதற்காக பல வகைகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் அந்த கட்டிடம் கட்டினால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற ஒரு கொள்கையோடும் இருக்கிறார். அந்த வகையில் அவர் நடிகர் சங்க கடனை அடைப்பதற்காகவும் கட்டிடத்தை கட்டுவதற்காகவும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார்.

அப்படத்தை பிரபு தேவா இயக்க ஐசரி கணேஷ் தயாரிக்க இருந்தார். மேலும் விஷாலுடன் இணைந்து கார்த்தியும் அப்படத்தில் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. படத்திற்கு கருப்பு ராஜா, வெள்ளை ராஜா என்ற தலைப்பை கூட முடிவு செய்திருந்தனர். ஆனால் திடீரென விஷாலுக்கு அரசியல் ஆசை வந்ததினால் அந்தப் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

Also read: முன்னுக்குப் பின் முரணாக பேசும் விஷால்.. விஜய்யை பார்த்ததும் பச்சோந்தியாக மாறிய சம்பவம்

அதன் பிறகு அரசியலில் ஜொலிக்க முடியாமல் பின்வாங்கிய விஷால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதை பார்த்த தயாரிப்பாளர் மீண்டும் விஷாலை அணுகி இப்பொழுது படம் பண்ணலாம் வாங்க என்று கூறியிருக்கிறார் ஆனால் விஷால் அதை மறுத்திருக்கிறார். மேலும் நான் அரசியலில் இறங்கி சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாது நான் ரொம்ப பிசி என்று கூறியிருக்கிறார்.

இதனால் நொந்து போன ஐசரி கணேஷ் அந்த முடிவையே தற்போது கைவிட்டு உள்ளார். இவ்வாறு அரசியல் ஆசையால் சில படங்களை நழுவ விட்ட விஷால் இப்போது அடுத்த வருட தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருக்கிறாராம். ஏற்கனவே இவர் தன்னுடைய பேராசையால் நம்பியவர்களுக்கு துரோகம் செய்தார். இப்போது மீண்டும் இவருக்கு முளைத்திருக்கும் அரசியல் ஆசை எங்கு போய் முடிய போகிறதோ என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

Also read: சரத்குமாரை மறைமுகமாக குத்தி காட்டிய விஷால்.. பணத்திற்காக மீண்டும் பற்றி எரியும் பழைய பகை