சினிமாவில் ஜெயிக்க அஜித், விஜய் செய்த சூழ்ச்சி.. பெரிய மீனை போட்டு சின்ன மீன்களை பிடிக்கும் தந்திரம்

இப்போது டாப் நடிகர்களாக இருக்கும் ஹீரோக்கள் எல்லாமே ஒரு காலத்தில் படிப்படியாக முன்னேறி வந்தவர்கள் தான். இப்போது மாஸாக, கிளாஸாக இவர்கள் இருந்தாலும் தொடக்க காலத்தில் ஒரு வெற்றி படத்துக்கு படாதபாடுபட்டவர்கள் தான். சினிமாவில் தாங்களும் நிலைத்து நிற்க தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள்.

இன்று கோலிவுட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருக்கும் அஜித், விஜய் கூட ஆரம்ப காலத்தில் வெற்றி படத்துக்காக கடினமாக உழைத்தவர்கள் தான். பெரும்பாலும் இவர்கள் செய்த மிகப்பெரிய தந்திரம் என்னவென்றால் மாஸ் ஹீரோக்களின் பெயரை சொல்லி தப்பித்தது தான். நடிகர் விஜய்யின் ஆரம்ப கால வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த்.

Also Read: ஊர் ஊராக அலையவிடுறாங்க.. உதயநிதியிடம் முதல் கோரிக்கை வைத்த சங்க தலைவர் விஷால்

ஆனால் விஜய் செய்த மற்றுமொரு பிளான் என்றால் அவர் தன்னை ஒரு ரஜினிகாந்த் ரசிகராக மக்களின் முன்னாள் காட்டிக்கொண்டார். எந்த பேட்டியில் கேட்டாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி ரொம்பவே பெருமையாக பேசுவார். அதுபோல தான் நடிகர் அஜித்தும் ஆரம்ப காலங்களில் தன்னை ஒரு தீவிர கமலஹாசன் ரசிகராக காட்டி கொண்டார்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் இப்படி பெரிய ஹீரோக்களின் பெயர்களை வளர்ந்து வரும் ஹீரோக்கள் சொல்வதால், அந்த ஹீரோக்களின் ரசிகர்கள் அப்படியே இவர்களுக்கு சப்போர்ட் செய்வது, இவர்களுடைய படங்களை பார்ப்பது என்று ஆரம்பித்துவிடுவார்கள். இதெல்லாம் கோலிவுட்டில் அவ்வளவாக கவனிக்கப்படாத ராஜதந்திரங்கள்.

Also Read: முன்னுக்குப் பின் முரணாக பேசும் விஷால்.. விஜய்யை பார்த்ததும் பச்சோந்தியாக மாறிய சம்பவம்

இவர்களை அப்படியே பாலோ செய்து வந்தவர் தான் சிலம்பரசன். இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி ரசிகர்களை கவர்ந்தார். கதாநாயகனாக ஆன பின் இவர் தன்னை நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்தி கொண்டார். இதனால் சிம்புவுக்கு அஜித் ரசிகர்களின் ஆதரவு அப்போது அதிகமாக பெருகியது.

இப்போது இந்த ரூட்டை புதிதாக கையில் எடுத்திருக்கிறார் நடிகர் விஷால். விஷால் இப்போது ரொம்ப அதிகமாக மேடைகளில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். தொடர் தோல்வி படங்களில் துவண்டு போயிருந்த விஷால், தளபதி 67ல் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானதால் என்னவோ இவர் இப்படி பேசி வருகிறார். விஜய்க்கு ஆதரவாக பேசினால் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் ஆதரவு அவருக்கு உண்டு.

Also Read: சரத்குமாரை மறைமுகமாக குத்தி காட்டிய விஷால்.. பணத்திற்காக மீண்டும் பற்றி எரியும் பழைய பகை

 

 

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்