புதன்கிழமை, ஜனவரி 1, 2025

அருள்தாஸின் தரமான 5 படங்கள்.. மறக்கமுடியாத பாபநாசம், ரவுடி டாக்டராக தெறிக்கவிட்ட சூது கவ்வும்

தமிழ் சினிமாவின் நடிகராக அறிமுகமாகி பின் ஓளிப்பதிவாளர், துணைக்கதாபாத்திரம் என பல திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகர் அருள் தாஸ். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் துணை நடிகராக நடித்து அசத்திய 5 சூப்பர்ஹிட் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

நான் மகான் அல்ல : நடிகர் கார்த்தி நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கார்த்தியின் அண்ணன் கதாபாத்திரத்தில் அருள் டாஸ் நடித்திருப்பார். காதல் காமெடி, ஆக்ஷன் என இப்படம் உருவான நிலையில் படம் வெளியாகி சக்கைபோடு போட்டது. குட்டி நடேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அருள் தாஸ் இத்திரைப்படத்தின் மூலமாக அதிகம் பேசப்பட்டார்.

Also Read : அசால்ட் சேது கேரக்டருக்கு பாபி சிம்ஹா முதல் சாய்ஸ் இல்லையாம்.. தேசிய விருதை விட்டுக் கொடுத்த நடிகர்

சூது கவ்வும் : இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். கடத்தல், காமெடி என இப்படத்தின் கதை அமைந்த நிலையில் பல ரவுடிகள், போலீஸ் கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும். அருள் தாஸ் இப்படத்தில் ரவுடி டாக்டர்ராக வலம் வருவார்.

நிமிர் : உதயநிதி ஸ்டாலின், சமுத்திரகணி உள்ளிட்டோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கியிருப்பார். காதல், அதிரடி என உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் கோபி என்ற அரசியல்வாதியாக அருள்தாஸ் நடித்திருப்பார்.

Also Read : விஷாலை படுகுழியில் தள்ளிய லத்தி.. தோல்விக்கான 10 பொருத்தமும் பக்காவா இருக்கு

தகராறு : 2013 ஆம் ஆண்டு அருள் நிதி, ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்குனர் கணேஷ் விநாயக் இயக்கினார். ஆக்ஷன், காமெடி, காதல், கடத்தல் என படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் இப்படத்தில் எதார்த்தமாக இடம்பெற்றிருக்கும். இப்படத்தில் அருள் தாஸ் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

பாபநாசம் : 2015 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தை மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிருந்தார். தெரியாமல் நடந்த கொலை சம்பவத்தை மறைக்க கமலஹாசன் என்னவெல்லாம் செய்யவேன்டுமோ, அத்தனையையும் தனது குடும்பத்தை காப்பாற்ற செய்வார். .இப்படத்தில் சுரேஷ் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வலம் வந்து எதார்த்தமாக நடித்திருப்பார் அருள் தாஸ்.

Also Read : காசு வாங்கிக்கொண்டு நயன்தாராவுக்கு கூஜா தூக்கும் பிரபலம்.. ரிவ்யூ பார்த்து கடுப்பில் காரி துப்பிய நெட்டிசன்ஸ்

Trending News