கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி வைக்கும் தயாரிப்பாளர்கள்.. வாயை விட்டு மாட்டிக்கொண்டு புலம்பி தவிக்கும் சிவகார்த்திகேயன்

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் இப்போது சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. என்னதான் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ஹீரோக்களின் பட்டியலில் இவர் இடம் பிடித்தாலும் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய அடி விழுந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

டாக்டர், டான் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தவருக்கு இந்த படம் படுதோல்வியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே ஏகப்பட்ட கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த இரண்டு படங்களின் வெற்றியும் புது தெம்பை கொடுத்தது. ஆனால் அது அனைத்தையும் பிரின்ஸ் படம் ஆட்டம் காண வைத்துவிட்டது.

இப்போது அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு சென்று விட்டார். எப்படியாவது கடனை அடைப்பேன் என்று சொன்ன சிவகார்த்திகேயன் கடந்த இரண்டு வருடமாக அதை அடைக்காமல் இருக்கிறாராம். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அவரை கூப்பிட்டு மிரட்டி இருக்கின்றனர். இனிமேல் பணம் கொடுக்காமல் உங்களுடைய படங்களை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்றும் மாவீரன் படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்றும் கூறியிருக்கின்றனர்.

இதனால் சிவகார்த்திகேயன் தற்போது என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி அயலான் படம் இப்போது கிட்டத்தட்ட 75 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதுவரை அப்படத்திற்காக 90 கோடி வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. மீதி படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்றால் இன்னும் 35 கோடி தேவைப்படுகிறதாம்.

ஆனால் தயாரிப்பாளரிடம் இப்போது பணம் இல்லை. அதனால் தயாரிப்பாளருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் இந்த படம் எப்போது எடுத்து முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவிக்கே தெரியவில்லை. இப்படி நாலா பக்கமும் அவருக்கு பிரச்சனையாகவே வந்து கொண்டிருக்கிறது.

இது அவருடைய மார்க்கெட்டை குறைக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இழுத்துக் கொண்டிருந்த ஹீரோ பட பிரச்சனை இப்போது நீதிமன்றம் வரை சென்றிருந்தது. ஆனால் அந்த தீர்ப்பு சிவகார்த்திகேயனுக்கு சாதகமாகவே இருந்தது. இருந்தாலும் போகும் பாதையெல்லாம் அவருக்கு கன்னிவெடி வைக்கும் தயாரிப்பாளர்களை நினைத்து அவர் புலம்பி தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →