வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இந்த வருட இறுதி வாரத்தில் வரிசை கட்டி நிற்கும் 7 படங்கள்.. 60 வயது நடிகையுடன் மோதும் ராங்கி பிடித்த திரிஷா

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நிறைய திரைப்படங்கள் வெளியாகும். அந்த வகையில் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிட்டத்தட்ட 15 இருக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் ஏழு படங்கள் மட்டுமே வெளியாகிறது.

அந்த வகையில் டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் எந்தெந்த படம் வெளியாகிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு மறுநாள் கிட்டத்தட்ட ஆறு படங்கள் ஒரே நாளில் வெறியாகிறது.

Also Read : திரிஷாவுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா.. விஜய்க்கு ஜோடி போட தீயாக வேலை செய்யும் குந்தவை

அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படம் வெளியாக உள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அருவா சண்டை, கடைசி காதல் கதை மற்றும் ஓ மை கோஸ்ட் படங்கள் வெளியாகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்துள்ள திரிஷாவின் ராங்கி படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதில் திரிஷா உடன் 60 வயது நடிகையின் படமும் வெளியாக உள்ளது. அதாவது கோவை சரளா, அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் செம்பி படமும் வெளியாக உள்ளது.

Also Read : கல்யாணம் பண்ணாமலே வாழ்கையை ஓட்டும் திரிஷா.. முத்தின கத்திரிக்காவின் ரகசியம் உடைந்தது

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் மேடைப் பேச்சால் சர்ச்சையில் சிக்கிய நிலையில் அவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. இப்போது கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டு பேசுவதையே குறைத்துக் கொண்டார். அந்த வகையில் செம்பி படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் போஸ்டரில் கோவை சரளாவின் கேட்டப்பும் வேற லெவலில் இருந்தது. மேலும் கமலும் இந்த படத்தில் பிரமோஷனில் கலந்து கொண்டார். ஆகையால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் செம்பி படம் உள்ளது. ஒரே வாரத்தில் ஏழு படங்கள் வெளியாவதால் எந்த படம் அதிக வசூலை அள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Also Read : 14 வருடம் கழித்து தயாரிப்பாளரிடம் மல்லு கட்டிய விஜய்.. கிள்ளி கேட்ட திரிஷாவுக்கு அள்ளிக் கொடுத்த தளபதி!

Trending News