தலைக்கு மேல் பிரச்சனையால் வெளிநாடு செல்லும் விஜய்.. கமலிடம் மட்டுமே இருக்கும் தீர்வு

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தொடங்கியதிலிருந்து தளபதிக்கு ஏதாவது ஒரு பிரச்சனையை சுற்றிக் கொண்டே இருக்கிறது. முதலில் வாரிசு படம் வெளியாவதிலேயே சிக்கல் இருந்த நிலையில் ஒரு வழியாக இப்போது பொங்கல் பண்டிகைக்கு வாரிசு ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

ஆனால் சில வருடங்களாகவே விஜய்க்கு தலை மேல் பிரச்சனை இருந்து வருகிறது. அதாவது விஜய்க்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக விஜய் மாறுபட்ட விக்குகளை பயன்படுத்தி வருகிறார். ஆனால் எதுவுமே அவருக்கு செட் ஆகவில்லை. அதுமட்டுமின்றி இந்த விஷயத்தை இணையத்தில் கேலி செய்து வருகிறார்கள்.

இதற்காக விஜய் வெளிநாடுகள் சென்று சிகிச்சை பெற்றாலும் இதற்கான பயன் இல்லையாம். சமீபத்தில் கூட விஜய் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் கலந்து கொண்ட போதும் அவரது விக் பேசுபவர்களுக்கு உள்ளானது. இதற்கான ஒரே தீர்வு கமலிடம் தான் உள்ளதாம்.

அதாவது கமலுக்கு 15 வருடங்களுக்கு முன்பே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் வெளிநாடு சென்று ஹேர் டிரான்ஸ்பர்மேஷன் சிகிச்சை பெற்றுள்ளார். இப்போது வரை அவர் கவலை இல்லாமல் உள்ளார். ஆனால் விஜய் இந்த விஷயத்தில் சற்று காலதாமதமாக இருந்துள்ளார்.

அதுமட்டும்இன்றி கமலிடம் ஆலோசனை கேட்டால் கண்டிப்பாக விஜய்க்கு ஒரு தீர்வு கிடைக்கும். நான் தனது கௌரவத்தை விட்டுக் கொடுத்து கமலிடம் இந்த விஷயத்தை கேட்க விஜய் தயக்கம் காட்டி வருவதாக சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

இவர் பேசியதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் தற்போது கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. ஆனாலும் விஜய் இந்த விஷயத்தை சற்று யோசித்தால் பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கும் என்று அவருடைய நலம் விரும்பிகள் கூறுகிறார்கள். ஆகையால் விஜய் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.