சிவகார்த்திகேயன் வசூல் ரீதியான மெகா ஹிட்டான டாக்டர், டான் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய ரோல் மாடல் ஆக யாரை பார்க்கிறார் என்பதும், அவரின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தவர் யார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.
சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்த மெரினா படம் தொடங்கி மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் எல்லாம் காமெடிகளில் பட்டையைக் கிளப்ப கூடிய நடிகராகவே தொடக்கத்தில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.
மேலும் விஜய்க்கு பிறகு குழந்தைகள் மற்றும் பெண்கள் விரும்பும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். பெரும்பாலும் இவர் படங்களில் தனியாக எந்த ஒரு காமெடி பண்ணும் கதாபாத்திரமும் தேவையில்லை. இவரே சகலமும் பிச்சு உதறி விடுவார்.
இயற்கையாகவே சிவகார்த்திகேயனுக்கு ஹியூமர் சென்ஸ் நிறைய உண்டு. விஜய் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கிய பிறகு அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் அவருடைய ஹியூமர் சென்சை மென்மேலும் வளர்த்துக்கொண்டார்.
ஆனால் அதற்கு அடிப்படையாக அமைந்த விஷயம் ஒன்று இருக்கிறது. ஆம் அவர் சின்ன வயதில் இருந்தே கிரேசி மோகன் ரசிகராம். அவரது நாடக நடைபெறும் போட்டி நிகழ்ச்சிக்கு அடிக்கடி சென்று விடுவாராம். கிரேசி மோகனை பார்த்து தான் இவர் ஹியூமர் சென்சை வளர்த்துள்ளார். இன்று அவர் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்.