சன் டிவியில் துவங்கப்பட்ட சில மாதத்திலேயே டிஆர்பி-யில் டாப் இடத்தைபிடித்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைகிறது. அதிலும் இப்போது ஜனனி தனது பணி நிமித்தம் காரணமாக கிளைண்டை சந்திக்க சென்றுள்ளார்
சென்ற இடத்தில் ஈஸ்வரியின் அப்பாவை சந்தித்துள்ளார். அப்பொழுது ஈஸ்வரி என் அப்பா ஜனனியிடம் ஈஸ்வரி வீட்டில் நடந்த அனைத்தையும் என்னிடம் சொன்னார் என்று ஜனனியிடம் பெருமையாக சொல்கிறார். அதற்கு ஜனனி இதற்கு நான் காரணம் அல்ல என்றும் இவை அனைத்தும் அவர்களுக்குள் இருந்த கோபமும் வேதனையும் தான் ஒரு வித வெளிப்பாடாக வெளிவந்துள்ளது என்று ஜனனி கூறுகிறார்.
அப்பத்தா ஜனனியிடம் சக்திக்கு அறிவுரை கூறுவது போல் ஒரு குட்டி கதையை சொல்கிறார். அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சக்தி அதனை மனதில் வைத்துக் கொண்டு குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்த பொழுது சக்தி தனது அண்ணன் குணசேகரனிடம் கம்பெனி டாக்குமெண்ட்களில் எல்லாம் எனது பெயரை நீக்கி விடுங்கள் என்று கூறுகிறார்.
சக்தி இவ்வாறு கூறியது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது. உடனே குணசேகரன் சக்தியை பார்த்து, என்ன ஆயிடுச்சு உனக்கு! என்று கேள்வி கேட்கிறார். உடனே அப்பத்தா, குணசேகரனை பார்த்து நக்கல் செய்வதுபோல் ‘சக்திக்கு ஓசியில் உடம்பை வளர்ப்பது பிடிக்கவில்லை’ என்று கூறுகிறார்.
Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்
இதனை கவனித்த கதிர், நீ யார சொல்ற என்று அப்பத்தாவிடமே எகிறிரி கொண்டு செல்கிறார். வீட்டில் நடப்பவை அனைத்தையும் ஜனனி கவனித்துக் கொண்டே இருப்பது போல் இன்றைய ப்ரோமோ ஆனது வெளியாகி உள்ளது. இவ்வாறு குணசேகரன் பாசம் என்ற பெயரில் தனது தம்பிகளை அடிமையாக்கி வைத்துள்ளார்.
சக்தி இதிலிருந்து வெளிவர ஒரு புது முயற்சியில் இறங்கி உள்ளது போலவும் அதன் முதல் முயற்சியாக குணசேகரனிடம் கம்பெனி டாக்குமெண்ட்களில் இருந்து என தனது பெயரை நீக்கும்படி தெரிவித்துள்ளார் . இதிலிருந்து அப்பத்தாவை ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது போலவும் குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டப் போவதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
Also Read: அசிங்கப்பட்ட ஜனனி.. அப்பத்தாவை பார்சல் செய்ய திட்டம் போட்ட குணசேகரன்