ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கார் விபத்தில் உயிர் பிழைத்த 10 கிரிக்கெட் வீரர்கள்.. தீயில் கருகிய பென்ஸ் கார், சாவு பயத்தில் இருந்து தப்பித்த ரிஷப் பண்ட்

உலகம் முழுதும் உள்ள பலரது விருப்ப விளையாட்டாக கிரிக்கெட் உள்ள நிலையில் அந்த விளையாட்டில் தங்களது நாட்டிற்காக விளையாடும் வீரர்களுக்கும் ரசிகர்கள் ஏராளம். அப்படி தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் அவர்களது சொகுசு கார்களில் செல்லும் போது எதிர்பாராத விபத்துக்களை சந்தித்து நூலிழையில் உயிர் தப்பித்திருப்பார்கள். அப்படிப்பட்ட 10 கிரிக்கெட் வீரகள் பற்றி பாரெல்லாம்.

ரிஷப் பண்ட் : அண்மையில் இந்திய கிரிக்கெட் வீரரான இவர் உத்தரகண்ட் மாநிலத்தை அடுத்த ரூர்க்கியில் நிகழ்ந்த கார் விபத்தில் ரிஷப் பண்ட்-க்கு தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் சென்ற வெள்ளை நிற பென்ஸ் கார் தீயில் கருகி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. தற்போது ரிஷப் பண்ட் பிளாஸ்டிக் சார்ஜரி செய்துக்கொள்ள டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னா : 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரத்துக்கு இரவு 2 மணியளவில் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது தீடீரென காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் நடுத்தெருவில் கட்டுப்பாட்டை இழந்து நின்றது. அதிஷ்டவசமாக எந்த ஒரு காயங்களும் இல்லாமல் சுரேஷ் ரெய்னா அந்த விபத்திலிருந்து தப்பினார்.

Also Read: ரிஷப் பண்ட் உயிர் பிழைத்த திக் திக் நிமிடங்கள்.. போலீசார் கூறிய திகில் அனுபவம்

முகமது அசாருதீன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூருக்கு தன்னுடன் 3 பேரை அழைத்து சென்றார். அப்போது கார் சாலையில் திரும்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வியத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் முகமது அசாருதீன் உள்ளிட்ட மற்ற 3 பேரும் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினார்.

அஃப்சர் சசாய் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அஃப்சர் சசாய், 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் சாலையில் தன் காரை ஒட்டி சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் அப்பளம் போல் அவரது கார் நொறுங்கிய நிலையில் தலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் : ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்,இந்தாண்டு மே மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள டவுன்வில்ஸ் பகுதியில் தனது வெள்ளை நிற சொகுசு காரில் இரவு சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள பாலத்தின் மேல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோசமான கார் விபத்தில் அவர் உயிரிழந்ததையடுத்து இன்றுவரை யாராலும் நம்ப முடியாத உயிரிழப்பாக உள்ளது.

Also Read: வார்னே அடுத்து இறந்து போன 46 வயதுடைய ஆஸ்திரேலிய வீரர்.. கார் விபத்தில் மரணம்!

சோயப் மாலிக் : 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக், பாகிஸ்தானின் உள்ள லாஹூர் நகரத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இவர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை தான் நன்றாக இருப்பதாக அவரே ட்விட் செய்து ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.

ஓஷேன் தாமஸ் : 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான கிரிக்கெட் வீரர் ஓஷேன் தாமஸ், ஜமைக்காவில் கார் விபத்தில் சிக்கினார். இந்த கார் விபத்தில் பல காயங்கள் ஏற்பட்டு மருத்துவமணையில் பல நாட்கள் சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கோலஸ் பூரன் : 2015 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் பூரன் மோசமான கார் விபத்தில் சிக்கிக்கொண்டார். இந்த விபத்தில் நிகோலாஸுக்கு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது சிறிது காலம் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் களத்தில் அதிரடி காட்டினார்.

முகமத் ஷமி : 2018 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி டெஹ்ராடூனில் இருந்து டெல்லிக்கு பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருக்கு தலையில் சிறு காயங்களும், வலது கண்ணின் மேல் சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளன.

Also Read: சர்ச்சைக்கு பெயர் போன 5 கிரிக்கெட் வீரர்கள்.. சகட்டுமேனிக்கு சண்டைபோட்டு சொந்த நாட்டை கேவலப்படுத்திய பிளின்ஃடாப்

Trending News