உலகநாயகன் கமலஹாசனுக்கு கடந்தாண்டு 2022 சிறப்பான ஆண்டாகவே அமைந்தது எனலாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றி பட்டித் தொட்டியெங்கும் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. 500 கோடிவரை வசூலை இப்படம் குவித்த நிலையில், தொடர்ந்து கமலஹாசன் தனது அடுத்தடுத்த படங்களான இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கமலஹாசன் 90 வயது இந்தியன் தாத்தாவாக நடித்து வருவதால், முகத்தில் போடப்படும் ஹைடெக் மேக்கப் மட்டுமே தினமும் 3 மணிநேரம் கமலின் முகத்தில் போடப்படுகிறதாம். இதன் காரணமாக கமலஹாசன் மேக்கப் கலையாமல் இருக்க வாயை அசைத்து சாப்பிடாமல், வெறும் ஜூஸ் மட்டும் குடித்துவிட்டு, உடல் மெலிந்து மிகவும் கடினமாக இப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே கமலஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பின், தேவர் மகன் 2 படத்தில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தொடர்ந்து இயக்குனர் ப.ரஞ்சித்தின் படத்திலும், லோகேஷ் கனகராஜின் விக்ரம் 3 உள்ளிட்ட படங்களிலும் நடிக்க கமல் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம், கமலஹாசன் இரண்டாவது முறையாக இணையுள்ளார்கள் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியையடுத்து இப்படத்தின் பாகம் 2 கதை இந்த வருடம் ஏப்ரிலில் வெளியிடபடவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஏற்கனவே கமலும், மணிரத்னமும் இணைந்து 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து சூப்பர்ஹிட் ஆனாது.
தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம், கமல் கூட்டணி உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்ற்கான அதிகாரபூர்வ தகவல் கமல் மற்றும் மணிரத்னம் தரப்பிலிருந்து இன்னும் வெளியாகாமல் உள்ளது. இது எல்லாமே ஒருபுறம் இருக்க தீடீரென கமலஹாசன் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத போதிலும், கமல்ஹாசன் தற்போது தன் கையில் உள்ள படங்களையெல்லாம் முடித்துவிட்டு ராஜமௌலியிடம் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவின் நடிப்பில் பேன் இந்தியா படம் ஒன்றை இயக்கி வரும் நிலையில், இப்படம் அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கமலின் நடிப்பில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.