தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாவதற்கு முன்பு மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் அதிகம் நடித்த மாளவிகா மோகனன் பின்னர் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கே சென்றார்.
இருப்பினும் டாப் நடிகையாக மாறத் துடிக்கும் மாளவிகா மோகனன், கதாநாயகிகளின் கதாபாத்திரம் வலுவாக பேசக்கூடிய படத்திற்காக காத்திருக்கிறார். அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி பட இயக்குனர் பா. ரஞ்சித் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
Also Read: மார்க்கெட் இல்லாத மாளவிகா கேட்கும் சம்பளம்.. தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்
ஆனால் சுட்டு போட்டாலும் உங்களுக்கு அது வராது என பா. ரஞ்சித் மாளவிகா மோகனனை அந்த படத்தில் இருந்து நீக்கி விட பார்த்திருக்கிறார். அதாவது பா. ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் படம் தங்கலான். இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் நடக்கும் கதைக்களம் என்பது அவர்கள் போட்டிருக்கும் கெட்டப்பை பார்த்தாலே தெரிகிறது.
இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ஒன்று மாளவிகா மோகனன். தங்கலான் படத்தின் கதைப்படி மாளவிகா மோகனுக்கு சிலம்பம் தெரியனுமாம். ஆனால் சுட்டுப்போட்டாலும் மாளவிகா மோகனுக்கு சிலம்பம் வரவே இல்லையாம். இதனால் இந்த படத்தில் இருந்து மாளவிகா மோகனனை விலக்கி விடும் எண்ணத்தில் பா. ரஞ்சித் இருந்திருக்கிறார்.
Also Read: வெறுத்துப்போய் கடுப்பின் உச்சத்தில் மாளவிகா மோகனன்.. நெருப்பில்லாமல் எப்படி அம்மணி புகையும்
அதனால் இந்தப் படத்தின் ஹீரோயின் நீங்க இல்லை என்று கூறி விட்டாராம். வேறு ஏதாவது சப்போர்ட்டிவ் கேரக்டரை மாளவிகா மோகனுக்கு கொடுத்து விடலாம் என்றும் பா. ரஞ்சித் முடிவெடுத்திருந்தார். ஆனால் இதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் மாளவிகா மோகனன் ஒரே நாள் இரவில் அவரை வியக்க வைக்க கூடிய செயலை செய்துள்ளார்.
இவ்வளவு நாள் சவால் நிறைந்த கேரக்டருக்காக ஏங்கிக் கொண்டிருந்த மாளவிகா மோகனன் தங்கலான் படத்தில் நிச்சயம் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை வியக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனியாக சிலம்பம் மாஸ்டரை வரவழைத்து இரவும் பகலும் கஷ்டப்பட்டு ஒரு வாரத்தில் கற்றுக் கொண்டாராம். இதை பார்த்து பிரமிப்பு அடைந்த பா ரஞ்சித் மாளவிகா மோகனையே ஹீரோயினாக்க முடிவு செய்துவிட்டாராம்.
Also Read: பாலிவுட் நடிகர் கூட நானா.? மனசாட்சி இல்லையா என குமரிய மாளவிகா மோகனன்