புதன்கிழமை, ஜனவரி 1, 2025

கார்த்தியுடன் கூட்டணி சேர்ந்த விஜய்சேதுபதி பட ஹிட் இயக்குனர்.. மிரட்டலான கூட்டணி

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு விருமன்,சர்கார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் வெளியானது. இதில் விருமன் திரைப்படம் யுவன் ஷங்கர் ராஜா இசை, முத்தையா இயக்கம், சூர்யாவின் 2 டி தயாரிப்பு, ஷங்கரின் இளைய மகள் அதிதியின் முதல் படம் என பிரமாண்டமாக ப்ரோமோஷன் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் இத்திரைப்படம் வெளியாகி படுதோல்வியடைந்தது.

இதனிடையே கார்த்தி முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்த சர்தார் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. ஒரு நாடு, ஒரு குடிதண்ணீர் என்ற திட்டத்தால் மக்கள் எப்படி பாதிப்படைகிறார்கள், தண்ணீரை பாட்டிலில் அடைத்து வைத்து குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இப்படத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கார்த்தி நடித்திருப்பார்.

Also Read: சர்தார் படத்திற்குப் பிறகு குவியும் பட வாய்ப்பு.. மாஸ் வில்லனுக்கு ஜோடியாகும் லைலா

மேலும் மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக படம் முழுதும் வந்த கார்த்தி, ரசிகர்களின் மனதில் நின்றார். இதனிடையே இந்தாண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி இப்படத்தின் பாகம் 2 ரிலீஸாகவுள்ளதையடுத்து, கார்த்தியின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25 வது படமான ஜப்பான் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில், தங்க நகை, ஆடை என ஜொலித்தபடி கார்த்தியின் போஸ் கொடுத்துள்ள போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் கார்த்தியின் 26 வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி கார்த்தியின் 26 வது படத்தை இயக்கவுள்ளார்.

Also Read: படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடும் பொன்னியின் செல்வன் நடிகர்.. மார்க்கெட் குறையவே எடுத்த அவதாரம்

கடந்த ஆண்டு ஆன்காலஜி திரைப்படமான குட்டி ஸ்டோரி படத்தில் ஆடல் பாடல் எனற கதைக்களத்தை இயக்கினார் நலன் குமாரசாமி .இதனிடையே இந்தாண்டு பிப்ரவரியில் சென்னையில் கார்த்தி 26, படத்தின் பூஜை தொடங்கப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் காமெடி கலந்த என்டர்டைன்மெண்ட் திரைப்படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஏற்கனவே கார்த்தியின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா, அலெக்சாண்டர், சகுனி உள்ளிட்ட படங்கள் காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கும். தற்போது அந்த படங்களின் பாணியில் நலன் குமாரசாமியுடன் முதன்முதலாக இணைந்து கார்த்தி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உச்சகட்ட போதை, பொண்ணுங்க என மஜாவாக வெளிவந்த ஜப்பான் பட போஸ்டர்.. உலகம் சுற்றும் வாலிபனாக கார்த்தி

Trending News