வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஓவர் கெத்து காட்டிய குணசேகரன்.. டம்மி பீஸ் ஆக்கி மூலையில் உட்கார வைத்து அப்பத்தா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் எதிர்நீச்சல் ஆனது காலம் காலமாக ஆண்களின் பிடியிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு சில பெண்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்கள், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை கொண்டு எழுதிய தலை எழுத்திலிருந்து பெண்கள் தங்களுக்கான தலை எழுத்தை தாங்களே மாற்றி எழுதிக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது குடும்பத்தில் உள்ள அனைத்து மருமகள்களும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப குடும்பச் சிறையில் இருந்து சுதந்திர காற்றை சுவாசி வைப்பதற்காக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பத்தா உடன் அவர்களின் கிராமத்திற்கு செல்ல இருக்கிறார்கள்.

Also Read: ஒரே கதையை வைத்து 2 சீரியல்களை உருட்டும் விஜய் டிவி.. இதுக்கெல்லாம் டிஆர்பி ரேட்டிங் ஒரு கேடு

இதனை ஜனனி செல்ல கண்டிப்புடன் கண்டிப்பாக வரவேண்டும் என்று மற்ற மருமகளிடம் ஆர்டர் போடுகிறார். ஆனால் ஒருவித தயக்கத்துடனே இருக்கும் ஈஸ்வரியின் மனநிலையை மாற்ற நந்தினியின் நக்கல் கலந்த காமெடி பேச்சால் கெத்தாக இருந்த குணசேகரனை ஒரு நொடியில் டம்மி பீஸ் என கலாய்த்து அனைவரையும் நகைச்சுவையில் ஆழ்த்துகிறார்.

ஆனால் இவர்களின் சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாக கதிர் தனது குழந்தையினை வைத்து வம்புக்கு இழுக்கிறார். கதிருடன் விசாலாட்சியும் கூட்டணி சேர்ந்து பேச இவர்கள் இருவருக்கும் தக்க பதிலடி அப்பத்தா திருப்பி கொடுக்கிறார். அப்பத்தா கூட்டணி எப்படி பந்து போட்டாலும் சிக்ஸர் அடிப்பது போல் குணசேகரன் அணிக்கு தக்க பதிலடி கொடுக்கிறார்.

Also Read: லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் 2 மகள்கள்

இதனைத் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சுதந்திர காற்றை சுவாசிக்க செல்ல இருக்கும் நிலையில் குணசேகரனின் கூட்டணிக்கு அப்பத்தாவின் மேல் உள்ள கோபம் பற்றி எரிவதை தன் கண்களாலேயே காண்பிக்கிறார்.

இதிலிருந்து நான் தான் என ஓவராக கெத்து காட்டி வந்த குணசேகரனை டம்மி பீஸ் ஆக்கி மூலையில் உட்கார வைத்து விட்டனர். இவ்வளவு நாள் ஓவர் கெத்து காண்பித்த குணசேகரன், இப்போது சொத்துக்கு ஆசைப்படுவதால் அப்பத்தா அவரை அடக்கி மூலையில் உட்கார வைத்திருக்கிறார். ஆனால் சொந்த ஊருக்கு சென்ற அப்பத்தாவை தீர்த்து கட்ட வேண்டும் என்ற முடிவில் குணசேகரன் பின்புலத்தில் பிளான் போடுவதாக தெரிகிறது. என்ன நடக்கப் போகும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

Trending News