சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஓவர் ஹெட்வெயிட் காட்டும் ஹர்திக் பாண்டியா.. புது கேப்டன் திமிரால் இந்திய அணி படும்பாடு

ஹர்திக் பாண்டியா இப்பொழுது இந்திய அணியில் புது கேப்டனாக இருபது ஓவர் போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி ஒரு மாத சுற்று பயணமாக இந்தியா வந்திருக்கிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் படைகளைக் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வென்றுள்ளது. இரண்டு போட்டிகளிலுமே இலங்கை அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். முதல் போட்டியில் இலங்கை 2 ரன்களில் மட்டுமே தோற்றது.

இப்படி இந்திய அணி பலமில்லாத இலங்கை அணி இடம் மோசமான அடி வாங்குவதற்கு காரணம் இப்பொழுது புது கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா தான். அவர் எடுக்கும் முடிவுகள் இந்திய அணிக்கு படுபாதகமாக அமைந்து வருகிறது. ஏதோ புதுமையாக செய்கிறேன் என்று பல முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து இந்திய அணியை தோல்வி பாதைக்கு அழைத்து செல்கிறார்.

முதல் போட்டியில் தீபக் ஹூடா மற்றும் அக்ஷர் பட்டேல் இருவரும் போராடி ரன்களை குவித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்ற சூழலில் போட்டியை இலங்கை பக்கம் போகும்படி மாற்றினார் ஹர்திக் பாண்டியா. அதுமட்டுமன்றி கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தேவையில்லாமல் அக்சர் பட்டேல் ஓவர்கொடுத்து போட்டியை பரபரப்பாக மாற்றினார். அந்த ஓவரில் எளிதாக அக்சர் ஒரு சிக்சரை கொடுத்துவிட்டார். கடைசியில் ஏதோ அதிர்ஷ்டவசமாக இந்தியா 2 ரன்களில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் முக்கியமான டாஸ்சை வென்றது இந்திய அணி. அந்த மைதானத்தில் இதுவரை முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதனை மனதில் கொள்ளாமல் பில்டிங்கை தேர்ந்தெடுத்தார் ஹர்திக் பாண்டியா. முதல் பேட்டிங்கில் இலங்கை அணி இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 200 ரன்களை கடந்தது.

இரண்டாவது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலிருந்து சொதப்பி கடைசியில் ஓரளவு தாக்குப்பிடித்து தோல்வியடைந்தது. தோல்விக்கு பின்னர் ஏன் முதலாவதாக பந்து வீச்சை தேர்ந்தெடுத்தீர்கள் என கேட்டதற்கு போட்டி முடிவுகளை பற்றி கவலை இல்லை எங்களுக்கு சவால் தான் வேண்டும் என்று தெனாவட்டாக பதிலளித்தார் கேப்டன் பாண்டியா. இவர் இப்படி சவால், சவால் என்று இந்திய அணியை தோற்கடிப்பது மிகவும் ஒரு அப்பட்டமான வேலையாக இருக்கிறது.

Trending News