சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

எனக்கு எப்பயுமே ரோல் மாடல் அவர் தான்.. ரோலக்ஸ் புகழ்ந்து பேசிய நடிகர் யார் தெரியுமா?

ரோலக்ஸ் என்ற பெயரை கேட்டவுடன் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது நடிகர் சூர்யா தான். விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோல்க்ஸ் கதாபாத்திரம் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அந்த காட்சி ரசிகர்களை வேற லெவலில் குதூகலப்படுத்தியது. தற்போது பலரும், மீண்டும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவை பார்க்க விக்ரம் 3 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வரலாற்று படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் சூர்யா தனது ரோல் மாடல் இவர் தான் என அண்மையில் வெளிப்படையாக ஒரு நடிகரை பற்றி பேசியுள்ளார். கடந்தாண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட்டானதையடுத்து, ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா கமலஹாசனிடம் 1 ருபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்தாராம்.

Also Read: 2022-இல் வில்லன்களாக ஜெயித்த டாப் 5 ஹீரோக்கள்.. ஆரம்பிக்கலாமா என கெத்து காட்டிய விக்ரம் ரோலக்ஸ்

அந்த அளவிற்கு நடிகர் சூர்யா கமலின் தீவிர ரசிகராவார். ஒருமுறை விருது வழங்கும் மேடையில் கூட கமலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு சூர்யா அந்த விருதை பெற்றார். அந்த அளவிற்கு சூர்யா கமலை சிறு வயதிலிருந்து ரசித்து வந்துள்ளார். விக்ரம் படம் ஹிட்டானவுடன் சூர்யாவை தன் வீட்டிற்கு அழைத்த கமலஹாசன், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் கமலஹாசனின் ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் கமல்ஹாசன் என்றுமே எனக்கு முன் மாதிரி என்றும், அவர் தான் எனது ரோல் மாடல் என சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் கமலஹாசன் வணிக ரீதியான படங்களையும் கொடுப்பார். அதே சமயத்தில் அதை தாண்டி பல முயற்சிகளையும் செய்வார் என்றும் சூர்யா தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஒரு படத்தின் எளிமையான வெற்றியை பெறுவதை விட, அர்த்தமுள்ள வெற்றியை பெறவேண்டும் என்று சூர்யா தெரிவித்தார்.

Also Read: ரிலீஸுக்கு முன்பே பல நூறு கோடி பிசினஸ் செய்த 6 படங்கள்.. மலைக்க வைத்த சூர்யாவின் 42வது படம்

விக்ரம் படத்தில் வசனங்கள் கமலுக்கு குறைவானதாகவே இருந்தது. மேலும் அவரின் நடிப்பும் ஆக்ஷன் காட்சிகளும் மாஸாக இருக்கும் .இவை எல்லாத்துக்கும் மேலாக முத்தக் காட்சிகளே இப்படத்தில் கமலுக்கு இல்லை. இதன் காரணமாக கமலாஹாசன் இனிமேல், தான் நடிக்கப்போகும் படங்களில் முத்தக் காட்சிகளை தவிர்க்க போவதாக கூறினார்.

முழுக்க முழுக்க அதிரடி படமாக வெளிவந்த இப்படம் கமலின் மார்க்கெட்டை மிகப்பெரிய உயரத்தில் நிறுத்தியுள்ளது. தற்போது கமலஹாசன் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜும் தற்போது தளபதி 67 படத்தை இயக்க மும்முரமாக உள்ள நிலையில், விக்ரம் 3 படத்தின் படப்பிடிப்பு, அடுத்த வருடத்தில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Also Read: மலையாள நடிகருடன் இணையும் கமல்ஹாசன்.. மீண்டும் மாஸ் கூட்டணியில் உருவாக உள்ள படம்

Trending News