வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோலிவுட்டை குத்தகைக்கு எடுக்கும் தில் ராஜு.. வாரிசுக்கு பிறகு போடும் மாஸ்டர் பிளான்

தெலுங்கு திரையுலகில் மிகப் பெரும் ஆளுமையுடன் இருக்கும் தில்ராஜு வாரிசு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. தற்போது மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த திரைப்படத்திற்கு பிறகு தில் ராஜு ஏகப்பட்ட பிளான்களை போட்டு வைத்துள்ளாராம்.

அதாவது டாப் ஹீரோக்களின் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் தில் ராஜூ தெலுங்கில் ஷங்கர், ராம்சரண் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது கோலிவுட்டிலேயே டென்ட் போடும் முடிவில் அவர் இருக்கிறாராம்.

Also read: விஜய், ரஜினி, கமலை பற்றி ஒரே வார்த்தையில் கூறி அசத்திய ஹெச்.வினோத்.. தில் ராஜ் இவர பார்த்து கத்துக்கோங்க

அதை தற்போது அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். அதாவது வாரிசு படத்தின் பிரமோஷனுக்காக ஊடகங்களில் பிசியாக பேட்டி கொடுத்து வரும் தில் ராஜு விஜய்யை தொடர்ந்து கோலிவுட்டின் டாப் ஹீரோக்களையும் வைத்து படம் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அந்த வகையில் அவர் அடுத்ததாக ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் உங்களால் விஜய் பட்ட பாடு போதாதா, இன்னும் முன்னணி நடிகர்களையும் வச்சு செய்ய காத்திருக்கிறீர்களா என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் வாரிசு திரைப்படத்தால் விஜய் எந்த அளவுக்கு நொந்து போனார் என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது துணிவு திரைப்படத்தை டார்கெட் செய்ததிலிருந்து அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பரவிய பிரச்சனை வரை அனைத்துமே விஜய் பேரை டேமேஜ் செய்தது.

Also read: மாஸ்டர் பிளான் போட்ட விஜய்.. சைலன்டாக நோட்டமிடும் ரஜினி, பற்றி எரியும் பிரச்சனை

இந்நிலையில் அவர் கோலிவுட்டையே குத்தகைக்கு எடுப்பது போல் பேசி இருப்பது சில விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் அடுத்ததாக எப்படியாவது ரஜினியின் கால்ஷூட்டை வாங்கி விட வேண்டும் என்ற பிளானிலும் இருக்கிறாராம். எது எப்படி இருந்தாலும் வாரிசு திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொறுத்து தான் தில் ராஜுவின் கனவு பலிக்குமா, பலிக்காதா என்பது தெரியவரும்.

அந்த வகையில் நாளை வாரிசு, துணிவு திரைப்படங்கள் நேரடியாக களத்தில் சந்திக்க இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த விவகாரத்தின் முடிவு என்ன என்பது நாளை தெரியவரும். இதற்காகவே தற்போது ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Also read: வாரிசு படம் அந்த ஹீரோக்களுக்கு போட்டியாக இருக்காது.. உண்மையை உளறிய தில் ராஜு

Trending News