வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கைதி பட நடிகரை காதலிக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. தீயாய் பரவும் நெருக்கமான புகைப்படம்

மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து வெளியாக இருக்கும் இரண்டாம் பாகத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் கைதி பட பிரபலம் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார்.

இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் சமீபத்தில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதனாலேயே தற்போது இவரின் மார்க்கெட் எகிறி இருக்கிறது.

Also Read: பொன்னியின் செல்வன் போல் உருவாகும் நாவல்.. 12 வருடம் கழித்து சர்ச்சை கதையை இயக்கும் சசிகுமார்

அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு குவிந்து வருகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாசுடன் இணைந்து இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு அதற்கு கீழ் ஒரு ஹார்ட்டையும் போட்டுள்ளார்.

இதை பார்த்த பலரும் லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சா என்று அவரிடம் கேட்டு வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். கைதி, மாஸ்டர் திரைப்படங்களின் மூலம் மிரட்டிய அர்ஜுன் தாஸ் தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.

Also Read: அவர் இல்லைனா எனக்கு இது கிடைச்சிருக்காது.. நன்றியுடன் திரும்பி பார்க்க வைத்த அர்ஜுன் தாஸ்

அதிலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த ஜோடியின் போட்டோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி எனக்கு திருமணத்தின் மீது எல்லாம் ஆர்வம் கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

Arun-dass
Arun-dass

ஆனால் சில நாட்களிலேயே இப்படி ஒரு போட்டோவை அவர் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை குழப்பி இருக்கிறது. மேலும் ஏதாவது திரைப்படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த ஜோடிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

Also Read: சமீபத்தில் பெண்களை மையப்படுத்தி ஓடிய 5 படங்கள்.. அடித்து துவம்சம் செய்த கட்டா குஸ்தி

Trending News