வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முழுக்க முழுக்க காப்பி அடித்த ராஜ மௌலி.. பொன்னியின் செல்வனை காப்பி அடித்த 5 கேரக்டர்கள்

பொன்னியின் செல்வன் நாவலை மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி கமல் வரை படமாக்க ரொம்பவே முயற்சி செய்தனர். கோலிவுட்டின் இந்த மிகப்பெரிய கனவை இயக்குனர் மணிரத்னம் நிஜமாக்கினார். ஆனால் மணிரத்தினம் இதை படத்தை எடுப்பதற்கு முன்பே பலரும் இந்த நாவலின் கதாபாத்திரங்களை தங்கள் படத்தில் கொண்டு வந்திருக்கின்றனர். அதிலும் இயக்குனர் ராஜ மௌலி தான் இதில் அதிகமாக காப்பி அடித்திருக்கிறார்.

விஜயாலய சோழன்: பொன்னியின் செல்வனின் முக்கியமான கதாபாத்திரம் தான் விஜயாலய சோழன். இந்த கதாபாத்திரத்தின் தழுவலை இயக்குனர் ராஜ மௌலி தன்னுடைய பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களில் எடுத்திருக்கிறார். மேலும் பாகுபலி திரைப்படத்தில் வரும் காலகேயர்கள் கூட பொன்னியின் செல்வனில் வரும் காட்சியின் தழுவல் தான்.

Also Read: பொன்னியின் செல்வன் போல் உருவாகும் நாவல்.. 12 வருடம் கழித்து சர்ச்சை கதையை இயக்கும் சசிகுமார்

செம்பியன் மாதேவி: பொன்னியின் செல்வனில் வரும் செம்பியன் மாதேவி கேரக்டரின் தாக்கம் தான் பாகுபலி படத்தின் இராஜமாதா. செம்பியன் மாதேவி தீவிர சிவ பக்தையாக இருப்பார், அதேபோல் போல் தான் சிவகாமியும். ராஜ ராஜ சோழன் இறந்துவிட்டதாக வந்த செய்தியை செம்பியன் மாதேவி தான் மக்களுக்கு தெரிவிப்பார். அதே போல் தான் பாகுபலியின் இறப்பு குறித்து சிவகாமி மக்களுக்கு தெரிவிப்பார்.

நந்தினி: கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும் இந்த நந்தினியின் கேரக்டரால் ஈர்க்கப்பட்டு நிறைய படங்களில் இதை வைத்திருக்கின்றனர். படையப்பா படத்தின் நீலாம்பரி, வடசென்னை திரைப்படத்தின் சந்திரா, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் ரீமாசென் போன்ற கதாபாத்திரங்கள் இந்த நந்தினி கேரக்டரின் தழுவல் தான்.

Also Read: பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் புலம்பி வரும் சுந்தர் சி.. 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் பிரம்மாண்ட படம்

பூங்குழலி: பூங்குழலி கதாபாத்திரமும் பொன்னியின் செல்வனில் கற்பனை கதாபாத்திரம் தான். படகோட்டியாக வரும் பூங்குழலி ரொம்பவும் தைரியமான பெண்ணாக காட்டப்பட்டிருப்பார். இந்த பூங்குழலியின் கேரக்டரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் தான் பாகுபலியின் அவந்திகாவும், முதல் மரியாதை ராதாவும்.

வந்தியத்தேவன்: பொன்னியின் செல்வனின் மிக முக்கியமான கேரக்டர் வந்தியத்தேவன். இந்த வந்தியத்தேவனின் தழுவல் தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கார்த்தி கதாபாத்திரம். மேலும் செல்வராகவன் இயக்கிய இந்த படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட கதை தான்.

Also Read: சத்தமே இல்லாமல் மணிரத்னம் செய்த தில்லாலங்கடி வேலை.. பொன்னியின் செல்வனில் காக்கப்பட்ட சீக்ரெட்ஸ்

Trending News