செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சூர்யா பட நடிகையை எல்லை மீறி தடவிய நபர்.. கோபத்தில் கொந்தளித்த சிம்பு பட நடிகை

சினிமாவில் உள்ள நடிகைகள் என்றால் பொது சொத்து என்பது போல அவர்களிடம் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். பொதுவாகவே சினிமா பிரபலங்கள் தனியாக வெளியில் செல்ல சுதந்திரம் கிடையாது. ஏனென்றால் அவர்களைப் பார்த்தால் ரசிகர்கள் ஒன்று கூடி விடுவார்கள்.

இதனால் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்திற்கு அவர்களால் செல்வது கடினம் தான். இது போன்ற பல பிரச்சனைகளை நடிகைகள் சந்தித்துள்ளதாக அவர்களே சொல்லி கேட்டிருக்கிறோம். இப்போது சூர்யா பட நடிகையை ஒரு நபர் எல்லை மீறி தடவி உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : சூர்யா மாதிரி ஒரு ஹிட் கொடுக்கணும்.. நெல்சனுக்கு பின் ரஜினி தட்டி தூக்கிய இயக்குனர்

அதாவது சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி. இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இப்போது அவர் தன்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன்காக ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது மேடைக்கு வந்த கல்லூரி மாணவர் ஒருவர் அபர்ணாவின் கையைப் பிடித்து போட்டோ எடுப்பதற்காக தோல் மீது கையை போட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா அவரிடமிருந்து விலகி நாற்காலியில் வந்த அமர்ந்து விட்டார். பின்பு அந்த மாணவன் வந்து, நான் உங்கள் ரசிகன் தவறாக எதுவும் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கேட்டு கொண்டார்.

Also Read : ஹீரோக்களை அடிச்சு துவம்சம் செய்து தேசிய விருது வாங்கிய 7 நடிகைகள்.. மூன்றாவது படத்திலேயே சாதித்து காட்டிய அபர்ணா

மேலும் அதே நபர் அபர்ணாவுக்கு கை கொடுக்கும்போது அதை அவர் மறுத்து விட்டார். ஒரு நடிகையாக இருந்தாலும் அவரது விருப்பம் இல்லாமல் தொடுவதோ, புகைப்படம் எடுப்பதோ மிகவும் தவறான விஷயம். இந்த செயலுக்கு தற்போது இணையத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மஞ்சுமா மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் அபர்ணா பாலமுரளியிடம் எல்லை மீறும் நபரின் வீடியோவை பதிவிட்டு இது மிகவும் அருவருப்பான விஷயம் என தனது கருத்தை கூறியுள்ளார்.

manjima-mohan

Also Read : சிம்பு படம் தள்ளிப்போனதற்கு உதயநிதி தான் காரணம்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

Trending News