வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தனி ஒருவனாக கெத்து காட்டும் போட்டியாளர்.. பிக்பாஸ் ஓட்டிங் இறுதி நாள், டைட்டில் வின்னர் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஆறு போட்டியாளர்களுடன் பைனலை நோக்கி சென்றுள்ளது. அதனாலேயே இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களாக அசீம், மைனா நந்தினி, விக்ரமன், சிவின், அமுதவாணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மக்கள் மனதில் இடம் பிடித்த போட்டியாளர்களாக இருப்பது அசீம், விக்ரமன் மற்றும் சிவின் ஆகியோர்தான். இதுவும் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை இப்போது அதிகரித்துள்ளது.

Also read: செரினாவிடம் கொச்சையாக பேசிய அசீம்.. டைட்டில் வின்னர் ஆகிவிடக் கூடாது என நடக்கும் சூழ்ச்சி

அதிலும் இந்த பிக் பாஸ் பட்டத்தை யார் வெல்லப் போகிறார் என்ற விவாதமும் சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதாவது வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் அளிக்கும் ஓட்டு இன்றுடன் முடிவடைய இருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு தற்போது ஓட்டுக்கள் அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் இந்த சீசனின் வெற்றியாளர் யாராக இருக்கக்கூடும் என்ற ஒரு கணிப்பும் தற்போது எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது இருக்கும் நிலவரப்படி அசீமுக்கு தான் அதிகபட்ச ஓட்டுகள் கிடைத்திருக்கிறதாம். அவருக்கு அடுத்த படியாக விக்ரமன், சிவின் ஆகியோர் இருக்கின்றனர். இதை வைத்து பார்க்கும் போதே அசீமுக்கு இந்த டைட்டில் கிடைக்கப் போவது உறுதியாக தெரிகிறது.

Also read: கதிரவனுக்குப் பின் 13 லட்சம் தட்டி தூக்கிய போட்டியாளர்.. மைனாவிற்கு விழுந்த ஆப்பு

ஏனென்றால் இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே அதிகபட்சமாக நாமினேட் செய்யப்பட்ட ஒரே போட்டியாளர் என்றால் அது இவர் மட்டும்தான். அது மட்டுமல்லாமல் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வெறுக்கும் ஒரே போட்டியாளராகவும் இவர் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய அதிகபட்ச கோபம் தான். பிக்பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு விதத்தில் சண்டை போடுவது, தாறுமாறாக பேசுவது என்று அனைவரின் கோபத்துக்கும் ஆளாகி வரும் அசீம் மக்கள் மனதில் இடம் பிடித்தது தான் ஆச்சரியம்.

இது பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு கூட புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அந்த வகையில் அசீம் பிக்பாஸ் வீட்டில் தனி ஒருவனாக இருந்து கெத்து காட்டி வருகிறார். மேலும் எத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் வெற்றியை நோக்கி முன்னேறி இருக்கும் இவர் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார். இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதி எபிசோடை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: பண மூட்ட கதிருக்கு பணப்பெட்டி யாருக்கு? மீண்டும் காசு மழை கொட்டும் பிக் பாஸ் வீடு

Trending News