ஒரு சில முன்னணி ஹீரோக்களின் புதிய படங்களை பற்றி அப்டேட் வெளியாகும். ஆனால் ஒரு சில நாட்கள் கழித்து அந்தப் படத்தைப் பற்றி எந்த தகவலுமே இருக்காது. அப்படி கோலிவுட் டாப் ஹீரோக்களாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சீயான் விக்ரம் ஒரு சில டைட்டில்களை கைவசம் வைத்துக் கொண்டு அந்தப் படங்களை எடுக்காமலும், டைட்டிலையும் விட்டுக் கொடுக்காமலும் இருக்கின்றனர்.
மர்மயோகி: உலகநாயகன் கமலஹாசனின் மருதநாயகம் வரிசையில் காத்திருக்கும் டைட்டில் தான் மர்மயோகி. 1951 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மர்மயோகி திரைப்படத்தின் தலைப்பை கமலஹாசன் வாங்கிக் கொண்டார். ஆனால் இன்று வரை அப்படி ஒரு படத்தை பற்றி அவர் வாயை திறந்து பேசவே இல்லை.
கபர்தார்: கமல்ஹாசன் நடிப்பில், உருவாக வேண்டிய படம் கபர்தார். இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிகர் கமலுடன் இணைந்து நடிப்பதாக கூட இருந்தது. ஆனால் அமிதாப்பச்சன் திடீரென்று அதிலிருந்து விலகிக் கொண்டார், அத்தோடு இந்த படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
சபாஷ் நாயுடு: கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு கேரக்டரில் ஈர்க்கப்பட்டு, எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சபாஷ் நாயுடு. முழுக்க முழுக்க நகைச்சுவை கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தொடங்குவதாகவும், நிறுத்தப்படுவதாகவும் இருக்கிறது.
லண்டனில் காமேஸ்வரன்: கமலஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் நடிக்க ஆசைப்பட்ட திரைப்படம் லண்டனில் காமேஸ்வரன். மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காமேஸ்வரன் கேரக்டரை மட்டும் வைத்து எழுதப்பட்ட கதை இது. இதேபோன்றுதான் ஏற்கனவே கமல் ஜப்பானின் கல்யாணராமன் படத்தையும் எடுத்திருந்தார். ஆனால் இந்த டைட்டிலும் கிடப்பில் தான் கிடக்கிறது.
மரம்: நடிகர் விக்ரமுக்கு ஏற்கனவே ரொம்ப வருடங்களாக துருவங்கள் பதினாறு என்ற படம் கிடப்பில் கிடந்தது. தற்போது தான் இந்த படத்தை முடிப்பதற்காக விக்ரமும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதேபோன்று நடிகர் விக்ரம் மரம் என்ற டைட்டிலையும் இன்று வரை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.