வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஏற்கனவே உருட்டுனது பத்தாதா?. விரைவில் வெளிவர உள்ள பார்ட் 2 சீரியல்

சின்னத்திரை தொடர்கள் ரசிகர்களின் வாழ்வியலில் அன்றாடம் ஒரு அங்கம் வகிக்கிறது. ஏனென்றால் வாரத்தில் ஏழு நாட்களில் ஆறு நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் டிஆர்பியை ஏற்றுவதற்காக எல்லா தொலைக்காட்சிகளும் புதிய சீரியல்களை இறக்கி வருகிறது.

இந்த சூழலில் ஏற்கனவே ரசிகர்கள் பார்த்து நொந்து போன சீரியல் இந்த வாரம் முடிவுக்கு வர இருக்கிறது. இப்போதாவது இந்த தொடருக்கு இயக்குனர் எண்டு கார்டு போட்டுள்ளார் என்ற சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டு உள்ளார்கள்.

Also Read : ஓவர் குடி, குக் வித் கோமாளி அரங்கில் மட்டையான போட்டியாளர்.. உடனே தூக்கிட்டு விஜய் டிவி பிரபலத்திற்கு வாய்ப்பு

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் இந்த வாரம் நிறைவுப் பகுதியை எட்டுகிறது. ஒரே கதையை இயக்குனர் உருட்டி வந்த நிலையில் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறதே என்ற மகிழ்ச்சி ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் இந்த தொடரின் பார்ட் 2 விரைவில் வர இருக்கிறதாம்.

அதாவது பாரதி கண்ணம்மா தொடரில் அருண் மற்றும் ரோஷினி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்கள். ரோஷினி சினிமா வாய்ப்பு கிடைத்ததால் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகி விட்டார். அதன் பின்பு மாடல் அழகியான வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also Read : காந்தாரா படத்தையும் விட்டு வைக்காத விஜய் டிவி.. இதெல்லாம் ஒரு பொழப்பு, ராஜா ராணி 2 வில் நடக்கும் அட்டூழியம்

மேலும் விரைவில் வர இருக்கும் பாரதி கண்ணம்மா பார்ட் 2 தொடரில் பாரதி கதாபாத்திரத்தில், சன் டிவியின் ரோஜா சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த சிபு நடிக்கவிருக்கிறார். மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் இப்போது நடித்து வரும் வினிஷா தேவியே நடிக்க இருக்கிறார்.

இதை அறிந்த ரசிகர்கள் தற்போது உச்சகட்ட மன உளைச்சலில் உள்ளனர். ஏனென்றால் டிஎன்ஏ என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு பாரதி கண்ணம்மா தொடரை பல வருடமாக உருட்டி வந்தார்கள். இப்போது மீண்டும் முதலில் இருந்தா என்று நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Also Read : விஜய் டிவி பிரபலம் தாடி பாலாஜியின் மனைவி கைது.. அம்பலமான சிசிடிவி ஆதாரம்

Trending News