ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே எங்களுக்கு டார்கெட்.. விஷால் , சிம்பு செய்யும் ராஜதந்திரம்

சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்கள் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகின்றனர். இவர்களின் நடிப்பில் வருடத்திற்கு ஒரு சில படங்கள் மட்டுமே வெளிவந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கெத்து குறையாமல் வசூலிலும் மாஸ் காட்டி வருகின்றனர். 

இவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய நடிகர்களான சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் போன்றவர்களின் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. ஆனால் விஷால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

Also Read: இதுவரை டிவி உரிமம் விற்கப்படாத 3 சிம்பு படங்கள்.. இதுல ரெண்டு சூப்பர் படமாச்சே!

ஆரம்ப காலகட்டங்களில் விஷால் நடித்த அனைத்து படங்களுமே  ஓரளவு நல்ல பெயரை பெற்று வந்தது. ஆனால் தற்பொழுது விஷால் நடிக்கும் படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றே சொல்லலாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் லத்தி. இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருப்பார். ஆனால் அதுவும் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை மட்டுமே சந்தித்தது.

இந்நிலையில் இவரைத் தொடர்ந்து சிம்பு நடித்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. இவரது நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் வரும்“மல்லிப்பூ”பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இதற்கு அடுத்ததாக ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பத்து தல. இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Also Read: நாலா பக்கமும் பிரச்சனையை சந்திக்கும் விஷால்.. திரும்பிய பக்கமெல்லாம் விழும் அடி

தற்பொழுது இவர்கள் இருவரும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் தேர்ந்தெடுக்கும் படம் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ பெரிய பட்ஜெட் படம் என்றால் உடனே ஓகே சொல்லி வருகின்றனர். அந்த வகையில் விஷால் ஒரு படத்திற்காக 30 கோடியும், சிம்பு 40 கோடியும் என தங்கள் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி இருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவும் 25 கோடி வரை சம்பளமாக கேட்கிறாராம்.

அதனாலயே இவர்கள் சிறிய பட்ஜெட் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம் தாங்கள் சம்பாதித்த பணத்தினை சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களால் தர முடியாது என்பதுதான். தற்பொழுது இந்த விவகாரம் சினிமா திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆருயிர், ஓருயிர்களுக்கு இடையே வந்த பிளவு.. ஒரே படத்தால் விஷால் கூட்டணிக்குள் வந்த அடிதடி

Trending News