ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

92 வயது லெஜெண்டரி ஆக்டர் விஸ்வநாதன் காலமானார்.. அவர் நடித்த தரமான படங்களும் வாங்கிய விருதுகளும்

1965 ஆம் ஆண்டு ஆத்ம கௌரவம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான கே விஸ்வநாத் அந்த படத்திற்காக சிறந்த இயக்குனருக்காக நந்தி விருதை பெற்றார். அதன் பிறகு தமிழில் சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்கள் நடித்திருக்கிறார். தற்போது மூத்த இயக்குனர்கள் ஒருவரான கே விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக தனது 92-வது வயதில் காலமானார்.

இவர் இந்தியாவில் மிக உயரிய விருதான தாதா சாகோ பால்கே விருது மற்றும் 5 முறை தேசிய விருதுகளின் பெற்ற பெருமைக்குரியவர். இதுமட்டுமல்ல 11 முறை ஃபிலிம் ஃபேர் அவார்ட், 7 முறை நந்தி விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார். மேலும் இவருடைய ஸ்வாதி முத்யம் என்ற படத்தை இந்திய அரசு சார்பாக 59 ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட பெருமையையும் பெற்றது. இவர் சினிமாவில் நடித்த ஐந்து சிறந்த படங்களை பற்றி பார்ப்போம்.

Also Read: தீபாவளியில் மோதிக் கொள்ளும் டாப் 3 நடிகர்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வரும் பெரும் புள்ளி

சுப சங்கல்பம்: 1995 ஆம் ஆண்டு தெலுங்கில் சுப சங்கல்பம் படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார் இயக்குனர் கே விஸ்வநாத். இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை சுண்டி இழுத்தது. இதனால் ரசிகர்களிடம் கிடைத்த பேராதரவின் காரணமாகவே அவர் படங்களை இயக்குவதை காட்டிலும் நிறைய படங்களில் நடிக்க துவங்கினார்.

முகவரி: 2000 ஆம் ஆண்டு அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான முகவரி படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருடைய அசத்தலான நடிப்பு தனித்துவமாக தெரிந்ததால் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் கே விஸ்வநாதன் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது.

யாரடி நீ மோகினி: 2008 ஆம் ஆண்டு ரொமான்டிக் காதல் திரைப்படம் ஆக மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனுஷ், நயன்தாரா இணைந்து நடித்திருப்பார்கள். இதில் மூத்த இயக்குனர் கே விஸ்வநாத் நயன்தாராவின் தாத்தாவாக தன்னுடைய உணர்ச்சிப் பூர்வமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இதற்கு முன்பு நிறைய படங்களில் சிறுசிறு வேடங்களில் மட்டுமே தோன்றிய கே விஸ்வநாத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாம் பாதி முழுக்க இடம்பெற்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

Also Read: தமிழில் பெரிய பட்ஜெட்டில் உருவான டாப் 5 படங்கள்.. பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாத ரஜினி

ராஜபாட்டை: 2011 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் அதிரடி மசாலா படமாக வெளியான இந்த படத்தில் சியான் விக்ரம் உடன் கே விஸ்வநாத் இணைந்து நடித்திருப்பார். இதில் தக்சனா மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் தான் படத்திற்கு ஆணி வேராக இருக்கும். இந்த படத்தில் விக்ரம் மற்றும் விஸ்வநாத் காம்போ பக்கவாக ஒர்க் அவுட் ஆகி சூப்பர் ஹிட் ஆனது.

லிங்கா: 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்தில் லெஜெண்ட் கே விஸ்வநாத் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் பெரும்பாலும் ரஜினியுடன் கே விஸ்வநாத் இணைந்து தன்னுடைய அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. ரஜினி எடுத்த துணிச்சலான முடிவு, தயக்கம் காட்டிய விஜய்

இவ்வாறு லெஜெண்டரி ஆக்டர் ஆன விஸ்வநாத் சிங்கம் 2, உத்தம வில்லன் என பல படங்களில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டியவர். கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு குருவாக விளங்கிய கே விஸ்வநாத்தின் மறைவு செய்தி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News