ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

திரிஷாவை ஓரம்கட்ட வரும் ஏஜென்ட்.. தளபதி 67 மிரட்டும் கதாபாத்திரம்

தளபதி 67 படத்தை பற்றிய பேச்சு தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவி வருகிறது. ஏனென்றால் லோகேஷ், விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக தளபதி 67 படத்தில் இணைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பல மடங்கு உள்ளது.

ஆனால் தளபதி 67 படக்குழு ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைக்காமல் ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாகவே காண்பித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் பெயரையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

Also Read : அப்ப புரியல, இப்ப புரியுது.. யாரும் எதிர்பார்க்காத தளபதி 67 டைட்டில் இதுதான்

இந்நிலையில் தளபதி 67 படத்தில் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரம் வர உள்ளது. இதனால் இப்படத்தின் கதாநாயகி த்ரிஷாவை விட அவருடைய கேரக்டருக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது விக்ரம் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்களின் பாராட்டை தட்டிச் சென்றவர் ஏஜென்ட் டீனா.

அவ்வாறு விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்திருப்பவர் வசந்தி. இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக டான்ஸ் மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். லோகேஷ் தான் முதல்முறையாக இவருக்கு விக்ரம் படத்தில் நடிகையாக வாய்ப்பு கொடுத்தார். இதைத்தொடர்ந்து வசந்திக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Also Read : விக்ரமை விட வசூலை ஜாஸ்தியாக லோகேஷ் படும் பாடு.. தளபதி 67 செய்யப்போகும் சம்பவம்

இப்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளனர். அப்போது விமானத்தில் செல்லும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஏஜென்ட் டீனாவும் இடம்பெற்றதால் தளபதி 67 படத்தில் இவர் நடிக்கிறார் என்று ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஒரு வேலை தளபதி 67 படத்தின் பாடல் காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்படுவதால் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருக்கு உதவியாக வசந்தி செல்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் தளபதி 67 படத்தின் ஏஜென்ட் டீனாவை மிஞ்சும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தில் வசந்தி நடிக்க தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also Read : ரத்தம் தெறிக்க வெளிவந்த போஸ்டரில் இருக்கும் ரகசியம்.. சோசியல் மீடியாவை கலக்கும் தளபதி 67 டைட்டில்

Trending News