திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மனவளர்ச்சி குன்றியதாக நடித்த 5 நடிகைகள்.. கல்யாண கலாட்டா செய்த குஷ்பூ

பொதுவாக அனைத்து நடிகைகளும் நல்ல கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதன் பெரிய ஆசையாக வைத்திருப்பார். ஆனாலும் அதற்கு மாறாக சில நடிகைகள் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடித்து பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடித்த ஐந்து நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

ஸ்ரீதேவி: பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு “மூன்றாம் பிறை” திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல் சீனுவாகவும், ஸ்ரீதேவி விஜியாகவும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஸ்ரீதேவிக்கு ஒரு கார் விபத்தில் பழைய ஞாபகங்கள் மறந்து மனநிலை சரி இல்லாமல் போய்விடும். இதனால் கமல் இவருக்கு அடைக்கலம் கொடுத்து ஒரு குழந்தை போல் பார்த்து வருவார். இதில் ஸ்ரீதேவியின் நடிப்பு இப்பவரையும் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு எல்லாரையும் நடிப்பால் கவர்ந்திருப்பார். அது மட்டுமல்லாமல் மற்ற ஹீரோயினிக்கும் ரோல் மாடலாகவே அந்த கேரக்டர் ஸ்ரீதேவிக்கு அமைந்தது. இப்படத்தில் கமலை விட அதிகமாக பெயர் வாங்கியது ஸ்ரீதேவியின் நடிப்புதான்.

Also read:ராதிகாவுடன் நடித்து விட்டு தங்கை நிரோஷாவிற்கு தீவிர ரசிகரான நடிகர்.. சூப்பர்ஸ்டாரால் வளர்ந்த பகை.!

ஊர்வசி: 1997 ஆம் ஆண்டு எல்எம் பாலாஜி இயக்கத்தில் அதிரடி திரைப்படமாக “மன்னவா” வெளிவந்தது. இதில் பிரஷாந்த், ஊர்வசி, சங்கவி மற்றும் கவுண்டமணி போன்ற பலர் நடித்திருந்தனர். இதில் ஊர்வசி மனவளர்ச்சி குன்றிய கேரக்டரில் இயல்பாகவே நடித்தார். இவருடைய கேரக்டர் பொதுவாகவே குறும்புத்தனமாக தான் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் இந்த கேரக்டரில் மிகவும் அழகாக நடித்திருப்பார்.

சௌந்தர்யா: ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு “பொன்னுமணி” திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்திக், சௌந்தர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் நடித்தனர். இது தமிழில் சௌந்தர்யா அறிமுகமான முதல் படம். ஆனால் முதல் படத்திலேயே மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடித்து விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் படமாக ஆனது.

Also read: ரஜினிகாந்த், ஸ்ரீதேவி கொடுத்த மரண மாஸ் ஹிட்ஸ்.. வசூல் வேட்டை ஆடிய 6 படங்கள்

ராதிகா: 1985 ஆம் ஆண்டு பிரதாப் இயக்கத்தில் “மீண்டும் ஒரு காதல் கதை” என்ற திரைப்படமாக வெளிவந்தது. இதில் பிரதாப், ராதிகா, ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் நடித்தனர். இதில் பிரதாப் மற்றும் ராதிகா மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக நடித்திருப்பார். இவர்களுக்கு இடையே ஏற்படும் உறவை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியது. இதில் ராதிகா அவர் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நடித்திருப்பார். இந்தப் படம் ராதிகாவிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.

குஷ்பூ: ராஜ்கபூர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு ஒரு நகைச்சுவை திரைப்படமாக “கல்யாண கலாட்டா” வெளிவந்தது. இதில் சத்யராஜ், மந்த்ரா மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் வரும் பாடலுக்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இதில் குஷ்பூ எதிர்பார்க்காத கேரக்டரில் மனவளர்ச்சி இல்லாதவராக நடித்திருப்பார். இவர் பொதுவாகவே எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு பெயர் வாங்கும் அளவிற்கு நன்றாகவே நடிப்பவர். அதிலும் இந்த படத்தில் சத்யராஜ் கல்யாணத்தில் பெரிய கலாட்டாவாக செய்து கேரக்டருக்கு ஏற்ற மாதிரியே நடித்திருப்பார்.

Also read: கோபத்தில் கொந்தளித்த குஷ்பூ அண்ட் கோ.. அப்ப நீங்க தப்பு தப்பா பேசினது ஞாபகம் இல்லையா!

Trending News