செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தனுஷ் தூக்கிவிட்டு அழகு பார்த்த 6 பிரபலங்கள்.. நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் கொண்டவர். தனுஷின் மீது பல சர்ச்சைகள் அவ்வப்போது வந்தாலும், அவரது ரசிகர்கள் அவரை ஒருபோதும் விட்டுக்கொடுத்தது இல்லை. மேலும் தனுஷால் உயர்ந்த சில பிரபலங்களும் அவரை நன்றி மறக்காமல் உள்ளனர். அப்படி தனுஷ் வாய்ப்பளித்த 6 பிரபலங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன்: தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்த சிவகார்த்திகேயன், இன்று பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளவர். இவர் தொகுப்பாளராக இருக்கும்போதே தனது அசாத்தியமான பேச்சு திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் தனுஷின் நண்பராக நடிக்க வைத்து சிவகார்த்திகேயனை தனுஷ் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் சில வருடங்களாக சிவகார்த்திகேயன், தனுஷ் இடையே ஏற்பட்ட மன வருத்தத்தால் சிவகார்த்திகேயன் நன்றி மறந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.

Also Read: அஜித், விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. வாத்தி வசூலை குவிக்க போட்டிருக்கும் திட்டம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தை இயக்கியது மூலமாக இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து வை ராஜ வை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். அன்று தனுஷின் மனைவியாக இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திறமையை அறிந்த தனுஷ், அவருக்கு வாய்ப்புக்கொடுத்து இயக்குனராக்கி அழகு பார்த்த நிலையில், இன்று அவர் விவாகரத்து செய்தது தான் சோகமான ஒன்று.

ராஜ்கிரண்: இயக்குனர், நடிகர் என பல அவதாரம் கொண்ட ராஜ்கிரண் 80களில் பலரது விருப்பமான நடிகராக வலம் வந்தவர். முதல்முறையாக ராஜ்கிரண் ஹீரோவாக அறிமுகமான படத்தை இயக்கியவர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, அதைத் தொடர்ந்து 27 வருடங்கள் கழித்து தனுஷ் இயக்குனராக அறிமுகமான பா.பாண்டி படத்தில் ராஜ்கிரணை மீண்டும் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்து தனுஷ் அவருக்கு ரீ என்ட்ரி வாய்ப்புக் கொடுத்தார்.

Also Read: 3-வது முறையாக இணையும் கூட்டணி.. அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ் பட இயக்குனர்

வெற்றிமாறன்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் வடசென்னை, பொல்லாதவன், அசுரன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்களது கூட்டணி எப்போதுமே வெற்றிக் கூட்டணி என்பதால், இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில் வெற்றிமாறன் அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்த நிலையில், வெற்றிமாறனின் திறமையை அறிந்த தனுஷ் அவரை இயக்குனராக்கி அழகு பார்த்தார்.

அனிரூத்: இன்று தமிழ் சினிமாவையே இசையால் தன் கையில் அடக்கி ஆளும் அனிரூத், தனது இசையால் பலரது மனதை கொள்ளைக் கொண்டு வருகிறார். அனிரூத், ரஜினிகாந்தின் உறவினர் என்பதால் அவரை 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் தனுஷ். 3 படத்தில் அனிரூத் இசையில், தனுஷ் பாடிய கொல வெறி பாடல் பட்டித் தொட்டியெங்கும் வைரலான நிலையில், அனிரூத் அப்படத்தை தொடர்ந்து இளம் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
Also Read: 5 வயசுல தான் அண்ணன் தம்பி, அப்புறம் பங்காளி.. ஒரே நாளில் மோதிக் கொள்ளும் தனுஷ், செல்வராகவன்

Trending News