ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அக்கட தேசத்தையும் பரபரப்பாக்கும் 6 தமிழ் படங்கள்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட ஜெயிலர்

கோலிவுட்டில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு எல்லாம் தற்போது இந்திய அளவில் நல்ல மவுசு இருக்கிறது. இதனால் தமிழ் படங்கள் பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் அடிக்கிறது. அதிலும் அக்கட தேசமான கேரளாவிலும் இனி வரும் நாட்களில் வெளியாக இருக்கும் 6 தமிழ் படங்கள் மோலிவுட்டையும் பெரும் பரபரப்பாக உள்ளது.

பொன்னியின் செல்வன் 2: மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி உலகெங்கும் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் தொடர்ச்சியாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகுவதால் படத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. அதிலும் கேரளாவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர்: அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ரஜினி சிறைத்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் மலையாள பிரபலம் மோகன் லாலும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மலையாள ரசிகர்களின் மத்தியில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

Also Read: வீட்டிற்கு வெளிப்படையாய் செல்ல முடியாத விக்ரம் .. பா ரஞ்சித்தால் படாதப்பாடு

இந்தியன் 2: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி பிற மொழிகளிலும் ஹிட் கொடுத்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகுவதால் மோலிவுட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ: மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் தற்போது கடும் குளிரின் காரணமாக மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் கேரள ரசிகர்களும் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Also Read: 19ஆம் நூற்றாண்டின் சொல்லப்படாத வரலாறு.. விக்ரமின் நடிப்பை பற்றி ஓப்பனாக பேசிய பா ரஞ்சித்

சூர்யா 42: 3டி முறையில் சரித்திர திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் சூர்யா வித்தியாச வித்தியாசமான 5 கெட்டப்பில் நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படம் 1000 வருடங்களுக்கு முன் நடந்த கதையை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு சில மாற்றத்தை ஏற்படுத்தி உருவாக்க திட்டமிட்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலான்: பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பு அரக்கனான விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தங்கலான். இதில் கோலார் தங்க சுரங்கத்தில் வாழும் பாமர மக்களின் சொல்லப்படாத வரலாற்றை இந்தப் படம் வெட்ட வெளிச்சம் போட்டு காட்ட போகிறது. இதில் விக்ரமின் கெட்ட ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. இதனால் பா. ரஞ்சித் தங்கலான் படத்தில் விக்ரமின் லுக்கை தற்போது வரை சஸ்பென்சாகவே வைத்திருக்கிறார். இதனால் இந்த படம் அக்கட தேசத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஆல் ஸ்டேட்ல அய்யா கில்லி மாதிரி.. அடுத்தடுத்து பட்டையை கிளப்பும் அனிருத்தின் 5 படங்கள்

இவ்வாறு இந்த 6 படங்களுக்கும் கேரளா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றனர். ஏனென்றால் தற்போது வெளியாகி இருக்கும் தனுஷின் வாத்தி படத்தின் வசூல் கேரளாவில் மந்த நிலையிலேயே துவங்கியிருக்கிறது. இருப்பினும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வசூலில் மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

ஆனால் கடந்த ஆண்டு வெளியான விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் கேரள பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த நிலையை மாற்றி இந்த 6 படங்களும் கேரளாவிலும் வசூல் வேட்டையாடும் என்று கோலிவுட் நம்புகிறது.

Trending News