புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

குணசேகரன் ஆட்டத்தில் விழப்போகும் விரிசல்.. பரபரப்பான எதிர்நீச்சல்

சன் டிவியின் ஆணாதிக்கத்தின் உச்சத்தில் இருக்கக்கூடிய எதிர்நீச்சல் சீரியல் ஆனது ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. அதிலும் குடும்ப சூழ்நிலைகளை மையமாக வைத்து வெளிவரும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகருக்கு கூட்டமே இருக்கின்றது. அநீதிக்கு ஆணிவேராக இருக்கக்கூடிய குணசேகரனுக்கு எதிராக பெண் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதிலும் எப்பொழுதுமே தான் என்ற அகங்காரத்தில் இருந்து வரும் குணசேகரனின் உண்மை முகமானது, தற்பொழுது குடும்பத்தில் உள்ளவர்கள் மத்தியில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத்தில் இவருக்கு என்று எல்லா விதத்திலும் உறுதுணையாக இருக்கக்கூடியவர்கள் தான் உடன்பிறந்த சகோதரர்களான கதிர் மற்றும் ஞானசேகரன். மேலும் கரிகாலன் பற்றிய உண்மை இவர்களுக்குத் தெரிந்த நிலையிலும் அண்ணனுடைய செயலிற்கு எதிர் பேச்சு பேசக்கூடாது என்று அமைதி காத்து வருகின்றனர்.

Also Read: டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசைக்க முடியாத அசுரனாக மாறிய ஒரே சேனல்

ஆனால் ஆதிரா திருமண விஷயத்தில் நடந்த பெரும் சம்பவத்தினால் இவரின் கோபம் முழுவதும் ஞானசேகரன் மீது திரும்பி உள்ளது. எப்படியாவது ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் இவர்களிடம் இருந்து ஆதிராவை காப்பாற்றுவதற்காக குடும்பத்தில் உள்ள மருமகள்கள் மிகத் தீவிரமாக போராடி வருகின்றனர். இவர்களுடன் சக்தியும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஜான்சி ராணி குடும்பம் பிராடு தனத்தில் ஈடுபடுகின்றவர்கள் என்று தெரிந்த நிலையிலும் குணசேகரன் அவர்களுக்கு சாதகமாகவே பேசி வருகிறார். அதுவும் ரேணுகாவின் தாயார் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்த கரிகாலன் பற்றிய உண்மையை என்னவென்று கூட கேட்காமல் அவர் மீதே பழியை சுமத்தி விட்டார்.

Also Read: டிஆர்பி-யில் முதல் மூன்று இடத்தை பிடித்த சேனல்கள்.. விஜய் டிவி-கே தண்ணி காட்டிய பிரபல டிவி

இதனைத் தொடர்ந்து ஞானசேகரன் தனது அத்தையின் மீது இதுபோன்ற குற்றங்களை ஏன் சுமத்துகிறீர்கள் என்பது போல் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதில் கோபத்தின் உச்சகட்டத்தில் இருந்த குணசேகரன் என்னுடைய பிச்சையில் தான் உன் குடும்பம் வாழ்ந்து வருகிறது என்று மனதை காயப்படுத்தும் அளவிற்கு பேசியுள்ளார். இப்படியாக உயிராய் இருந்த அண்ணனே இப்படி பேசியதால் மிகவும் மனம் உடைந்து போய் உள்ளார்.

இந்நிலையில் குடும்பத்தில் உள்ள பெண்களை மரியாதை இல்லாமல் தான் என்ற அகங்காரத்தில் இழிவாக பேசி வருகிறார். தொடர்ந்து இவர் செய்யும் அக்கிரமங்களில் பெரிய விரிசல் விழ காத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் இவருடைய அகங்காரத்தை சுக்குநூறாக உடைக்கும் அளவிற்கு பெரும் சம்பவமானது காத்துக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் குணசேகரன் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: முதல் மரியாதை ராதாவாக மாறிய கருப்பழகி.. சன் டிவி நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

Trending News