ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மனதில் ஆழமாக பதிந்த கலையரசனின் 5 படங்கள்.. மெட்ராஸ் படத்தில் நட்புக்காக உயிர்விட்ட அன்பு

தமிழ் சினிமாவில் வெளிவரக்கூடிய படங்களில் ஹீரோக்களை விடவும் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மத்தியில் வெகு விரைவிலேயே பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் கலையரசன். அப்படி இவர் நடிப்பில் வெளிவந்து மக்களின் மனதில் ஆழமாக பதிந்த 5 படங்களை இங்கு காணலாம்.

மெட்ராஸ்: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் மெட்ராஸ். இதில் கார்த்தி-க்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். இப்படத்தில் கலையரசன், கார்த்தி உடைய நண்பராக அன்பு என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் நட்பிற்காக உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். 

Also Read: காதலியை கரம்பிடித்த கார்த்தி பட இயக்குனர்.. இணையத்தை கலக்கும் திருமணம் புகைப்படங்கள்

சார்பட்டா பரம்பரை: 2021 ஆம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான விளையாட்டு சார்ந்த அதிரடி திரைப்படம் ஆகும். இதில் இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை என இரண்டு குலங்களுக்கு இடையே நடக்கும் மோதலை மயமாக வைத்து படமானது உருவாகியுள்ளது. இப்படத்தில் வரும் ரங்கன் வாத்தியாரின் மகனாக வெற்றிச்செல்வன் என்னும்  கதாபாத்திரத்தில் ஆர்யாவிற்கு எதிராக தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மதயானைக் கூட்டம்: இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான அதிரடி திரைப்படம் ஆகும். இப்படத்தில் கதிர், ஓவியா, கலையரசன், வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் கலையரசன் பூலோகராசா என்னும் துணை கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். 

Also Read:பசுபதியை வளர்த்துவிட்ட 6 படங்கள்.. சார்பட்டா பரம்பரை படத்தில் மிரட்டிய ரங்கன்

கபாலி: 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ். தாணு தயாரித்துள்ளார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் கபாலி. இதில் ரஜினிகாந்த் உடன் ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதைக்களமானது மலேசியாவில் உள்ள தாதாவின் கதையை மையமாக வைத்து வெளிவந்துள்ளது. இதில் கலையரசன் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம்: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இதில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவின் உயிர் தோழனாக நடித்துள்ள கலையரசன் வேலை இல்லா திண்டாட்டத்தால் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டி இருப்பார்.  

Also Read: சூப்பர் ஸ்டார் இதுவரை செய்த இமாலய சாதனை.. தளபதியால் தொட கூட முடியாது, இனி யாரும் பிறக்கவும் இல்ல

Trending News