வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஆதிராவிற்கு குணசேகரன் வைத்த செக்.. கரிகாலனுக்கு அடித்த ஜாக்பாட்

டிஆர்பி-யில் பயங்கர டஃப் கொடுக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் பெண்களை கிள்ளுக்கீரை போல் நினைத்துக் கொண்டிருந்த குணசேகரனுக்கு எதிராக, குடும்பத்தில் உள்ள அனைவரும் தக்க பதிலடி கொடுப்பதால் மேலும் சீரியல் சூடு பிடிக்கிறது.

ஆதிரா இப்போது சென்டர் வரை செல்ல நினைக்கிறார். ஆனால் அவருடைய அண்ணன் குணசேகரன், ‘வெளியில் செல்லும் வேலை இருந்தால் கரிகாலனுடன் செல்! இல்லையென்றால் போகாதே’ என்று செக் வைக்கிறார். ஆதிராவிற்கு கரிகாலனை அழைத்து செல்ல சுத்தமாகவே பிடிக்கவில்லை. இருப்பினும் அண்ணன் சொன்னதால் கரிகாலனுடன் கிளம்புகிறார். இதை கரிகாலன், தனக்கு அடித்த ஜாக்பாட் ஆக நினைத்து  துள்ளி குதித்துக் கொண்டு கிளம்பினார்.

Also Read: இந்த கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தா நீங்க காலி.. குடும்ப குத்து விளக்கு ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது போல் ஆதிராவிற்கு நடந்திருக்கிறது. இத்தனை நாட்களாக அண்ணன்களுடன் சேர்ந்து கொண்டு கொஞ்சம் நஞ்ச ஆட்டமா ஆடினாய். அந்த கர்மா எல்லாம் இப்போது சும்மா விடாமல் சுற்றி சுற்றி அடிக்கிறது. ஏனென்றால் ஆதிராவிற்கு சுத்தமாகவே பிடிக்காத திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார் குணசேகரன்.

அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு அதற்கான வேலைகளை மும்முரமாக பார்த்து வருகிறார். ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக ஜனனி இருந்து வருகிறார். கண்டிப்பாக இந்த திருமணம் நடக்காது, நடக்கவும் விடமாட்டேன் என்பது போல், தனக்கே உண்டான தோரணையில் கம்பீரமாக தெரிவித்துள்ளார்.

Also Read: எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளத்தின் மொத்த லிஸ்ட்.. ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சம் பட்ஜெட்டா

மேலும் கரிகாலனுக்கும் ஆதிராவிற்கும் நடக்கக்கூடிய நிச்சயத்தை தடுத்து நிறுத்தியே ஆகுவேன் என்று ஜனனி குணசேகரனிடம் சவால் செய்கிறார். உடனே குணசேகரனும், ‘ஏய்!’ என்று பல்லை கடித்துக் கொண்டு முறைத்து பார்க்கிறார். இப்படி பெண்களை சுத்தமாகவே மதிக்காத குணசேகரனின் ஆட்டிட்யூட் சீரியலை பார்ப்பவர்களை வெறியேற்றுகிறது.

ஆனால் ஜனனி ஆதிராவிற்காக இவ்வளவு உறுதுணையாக இருப்பதை ரசிகர்கள் பாராட்டுகின்றனர். இருப்பினும் அண்ணங்களுடன் சேர்ந்து கொண்டு ஓவர் ஆட்டம் போட்டு ஆதிராவிற்கு இதெல்லாம் பத்தாது, கரிகாலன் நிச்சயம் ஆதிராவை திருமணம் செய்து கொண்டு அவருடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Also Read: பிரபல சேனலை ஒரேடியாக ஓரம் கட்டிய சன் டிவி.. டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 10 சீரியல்கள்

Trending News