இதுவரை கெஸ்ட் ரோலில் நடிக்காத ஒரே ஹீரோ.. புது ட்ரெண்டை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ்

பொதுவாக இயக்குனர்கள் தங்கள் படம் வெற்றி அடைவதற்காக நிறைய பிளான் போடுவார்கள். ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் அந்த ஹீரோ ஒரு முன்னணி நடிகரின் ரசிகராக இருப்பது போல் காட்டுவார்கள். முன்னணி நடிகர்கள் யாரையாவது அந்தப் படத்தில் பாட்டு பாட வைப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு சின்ன காட்சியில் கெஸ்ட் ரோல் செய்ய வைப்பார்கள்.

படத்தின் வெற்றிக்காக எப்படியாவது ஒரு முன்னணி ஹீரோவை தங்கள் படங்களில் கெஸ்ட் ரோல் செய்ய வைத்து விடுவார்கள் சில இயக்குனர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் என நிறைய முன்னணி ஹீரோக்கள் இதுபோன்று கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்கள்.

Also Read: 500 பேருடன் காஷ்மீரில் மையம் கொண்டுள்ள லோகேஷ்.. பிரம்மாண்டத்தில் ஷங்கரையே மிஞ்சிடுவார் போல!

இதிலும் நடிகர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஒரு படத்திலேயே பல முன்னணி ஹீரோக்களை நடிக்க வைத்து விடுகிறார். இதனாலேயே அவர் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிடுகிறது. அவருடைய படம் என்றாலே யார் கெஸ்ட் ரோல் பண்ண போகிறார் என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கும்.

இதற்கு காரணம் இப்படி முன்னணி ஹீரோக்களை கெஸ்ட் ரோலில் கொண்டு வந்து விட்டால் அந்தப் படத்தின் ஹைப் அதிகமாகிவிடும். கெஸ்ட் ரோல் செய்யும் ஹீரோக்களின் ரசிகர்களும் அந்த படத்திற்கு சப்போர்ட் செய்வார்கள். இதனால் படத்தின் பிசினஸ் இன்னும் பல மடங்கு ஆகி விடும் என்பதுதான் இயக்குனர்களின் பிளான்.

Also Read: லோகேஷ் யுனிவர்சில் ரஜினி இணைய வாய்ப்பே இல்லையாம்.. இந்த ஒன்றை காரணம் காட்டி கழட்டி விட்ட சம்பவம்

அப்படி பிளான் போட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய அத்தனை படங்களுமே வெற்றி தான். அதிலும் அவருடைய சமீபத்திய ரிலீசான விக்ரம் திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல் பண்ணியதெல்லாம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனாலேயே இந்த கெஸ்ட் ரோல் என்பது தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் ஆகிவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கிய பல முன்னணி ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் கெஸ்ட் ரோல் செய்யாத ஒரு ஹீரோ என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் தான். ஏனென்றால் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ஹீரோவாக முழு படத்திலும் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

Also Read: வெறும் பெயரை வைத்து மட்டுமே விளையாடும் லோகேஷ்.. லியோ படத்திலிருந்து வெளிவந்த ரகசியம்