தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இவர் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷமாகவே கருதப்பட்டார். அதிலும் இவர் தற்பொழுது சினிமாவில் டாப் நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் ஹீரோக்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். அப்படியாக சிவாஜி கணேசன் டாப் 6 ஹீரோக்களுடன் இணைந்து நடித்த படங்களை இங்கு காணலாம்.
ஒன்ஸ்மோர்: நடிகர் விஜய் நடிப்பில் உருவான இப்படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்யுடன் சரோஜாதேவி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சிவாஜி கணேசன் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கும் டஃப் கொடுக்கும் விதத்தில், தனது துருதுருவென ஆக்டிவாக இருக்கும் நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
Also Read: இந்திய சினிமாவில் சிவாஜிக்கு இழைக்கப்பட்ட துரோகம்.. நடிகர் திலகத்துக்கு மறுக்கப்பட்ட தேசிய விருது
தேவர்மகன்: கமலஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தேவர் மகன். இதில் சிவாஜி கணேசன், கமலஹாசன், கௌதமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதிலும் பெரிய தேவர் என்னும் கெத்தான கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளது.
படையப்பா: 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. இதில் இவருடன் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் சிவாஜி கணேசன் படையப்பாவின் தந்தையாக மாஸ் காட்டி இருப்பார்.
Also Read: தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்கள்.. சிவாஜியை மிரள விட்ட தலைவி
வீரபாண்டியன்: விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் வீரபாண்டியன். இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் சிவாஜி கணேசன், ராதிகா ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் சிவாஜி கணேசன் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் கிராமத்தின் தலைவராக நடித்துள்ளார்.
பசும்பொன்: 1995 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் பிரபு, சிவாஜி கணேசன், ராதிகா உள்ளிட்டோர் இணைந்து நடித்த திரைப்படம் ஆகும். இதில் சிவாஜி கணேசன் துரைராசு தேவர் என்னும் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். அதிலும் ராதிகாவின் பாசக்கார தந்தையாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டு: சத்தியராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் ஜல்லிக்கட்டு. இதில் இவருடன் சிவாஜி கணேசன், ராதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் மணிவண்ணன் இயக்கிய இப்படத்தில் சிவாஜி கணேசன், ராம் பிரசாத் என்னும் கதாபாத்திரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக தீர்ப்பினை வழங்கும், நீதிபதியாக நடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.
Also Read: சிவாஜியை உதாசீனப்படுத்திவிட்டு எம்ஜிஆரிடம் சென்ற பிரபலம்.. கடைசியில் அவமானப்பட்டது தான் மிச்சம்