பொதுவாகவே இப்பொழுது வரும் படங்கள் 50 நாட்களுக்கு திரையரங்கில் ஓடுவது அபூர்வமாக இருக்கிறது. ஆனால் 80, 90 களில் வந்த படங்கள் வெற்றி படமாக அமைவதோடு மட்டுமல்லாமல் 100 நாட்கள் மற்றும் 175 நாட்களுக்கும் மேல் திரையரங்களில் ஓடி பெரிய சாதனை படைத்திருக்கிறது. அதிலும் கமல் நடித்து 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்களை பற்றி பார்க்கலாம்.
அவள் ஒரு தொடர்கதை: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், சுஜாதா, ஜெயலட்சுமி, ஜெய்கணேஷ் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் உள்ள பாடலுக்கு கண்ணதாசன் வரிகள் எழுத எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்திருக்கிறார். முக்கியமாக இதில் வரும் கடவுள் அமைத்து வைத்த மேடை இந்தப் பாட்டை எப்பொழுதும் மெய்மறந்து கேட்க வைக்கும். இப்படத்தின் கதையானது ஒரு நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண் தன் குடும்பத்தை ஆதரிப்பதற்காக அவருடைய ஆசைகளை தியாகம் செய்யும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெற்றி பெற்றது.
Also read: காலங்கள் தாண்டியும் பேசப்படும் கமலின் 5 படங்கள்.. பார்ட் 2-க்காக ஏங்க வைத்த தேவர் மகன்
சகலகலா வல்லவன்: எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு சகலகலா வல்லவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், அம்பிகா, ரவீந்திரன், விகே ராமசாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நகரத்தில் வளர்க்கப்படும் ஒரு பெண், கிராமத்தை சேர்ந்த ஒரு பையனை கேலி செய்யும் போது அந்தப் பெண்ணை மாற்றுவதும், பிறகு தங்கச்சிக்காக அந்த குடும்பத்தை சரி செய்யும் விதமாகவும் கதை அமைந்திருக்கும். இப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது மற்றும் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.
கல்யாண ராமன் : ஜி.என் ரங்கராஜன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு கல்யாணராமன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், ஸ்ரீதேவி, வி.கே ராமசாமி ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அத்துடன் 140 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இப்படத்தின் தொடர்ச்சியை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் கல்யாணராமன் என்ற படம் உருவாக்கப்பட்டது.
Also read: கஜானாவை திறக்காமலே படத்தை தயாரிக்கும் கமல்.. ராஜதந்திரியாக மாறிய உலக நாயகன்
வாழ்வே மாயம்: ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வாழ்வே மாயம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர் மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் தன் காதலிக்கும் பெண் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று காதலை தியாகம் செய்து தனக்கு நோய் இருப்பதை வெளி காட்டாமல் கெட்டவராக அவரிடம் காட்டிக் கொண்டு அவர் வேறு ஒரு திருமணத்தை செய்யும் விதமாக இக்கதை அமைந்திருக்கும். இப்படம் திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.
அபூர்வ சகோதரர்கள்: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி மற்றும் ரூபினி ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் கமல் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். இப்படத்தின் கதையானது சிறுவயதில் பிரிந்த இரட்டையர்களான ராஜூ மற்றும் அப்பு தனித்தனியாக வாழ்ந்து வரும் போது தந்தையை கொன்ற குற்றவாளிகளுக்கு எதிராக பழிவாங்கும் அப்புவின் முயற்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இதில் அப்பு என்ற கேரக்டரில் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு அரக்கன் போல் நடித்துக் காட்டி இருப்பார். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அத்துடன் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.
Also read: இயக்குனர்கள் வில்லனாக மாஸ் காட்டிய 5 படங்கள்.. அரசியல்வாதியாக மிரட்டிய மணிவண்ணன்