ஸ்ரீபிரியா காதல் வலையில் சிக்காமல் தப்பித்த 5 ஹீரோக்கள்.. மிரட்டி விட்டு காதலை பிரித்த சிவாஜி

70, 80களில் டாப் ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஸ்ரீபிரியா சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் முன்னணி நடிகையாக இருந்தபோது நடித்து நடிகர்களுடன் சரமாரியாக கிசுகிசுக்கப்பட்டார். அப்படி ஸ்ரீபிரியா விரித்த காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப்பான 5 ஹீரோக்கள் யார் என்பதை பார்ப்போம்.

கமல்: அவள் ஒரு தொடர்கதை, தங்கத்திலே வைரம், மோகம் முப்பது வருஷம், ஆடு புலி ஆட்டம், ராம் லட்சுமண், சிம்லா ஸ்பெஷல், வாழ்வே மாயம் உள்ளிட்ட பல படங்களில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து, உலக நாயகனின் கதாநாயகியாகவே ரசிகர்களுக்கு தெரிந்தவர் ஸ்ரீபிரியா. இவர் மற்ற நடிகர்களை விட கமலுடன் கொஞ்சம் நெருக்கம் அதிகமாகவே நடிப்பார். இதனால் இவர்கள் காதலர்கள் என்றும் விமர்சித்தனர். ஆனால் அது, ஒரு தலை காதலாகவே மாறியது. ஏனென்றால் 70களில் முன்னேறி வரும் நடிகராக இருந்த கமலஹாசன், ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்ள தயாராகவில்லை. இருப்பினும் அவர் பலமுறை கமலை திருமணம் செய்து கொள்ள முயற்சித்தார். ஆனால் கமல், கடைசிவரை சிக்காமலே கம்பி நீட்டினார்.

ரஜினி: கமலஹாசனுக்கு பிறகு ஸ்ரீபிரியா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான் அதிக படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவர் ரஜினியுடன் ஆடு புலி ஆட்டம் துவங்கி மாங்குடி மைனர், அவள் அப்படித்தான், தாய் மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், பில்லா, தீ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படங்களில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். ரஜினியுடன் நடிக்கும் போது ஸ்ரீபிரியா எந்தவித தயக்கமும் இல்லாமல் கவர்ச்சி தூக்கலான உடையில் எல்லை மீறி ஆட்டம் போட்டு இருப்பார். ஆனால் ரஜினி, திரைக்குப் பின்னால் ஸ்ரீபிரியாவின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

Also Read: ரஜினிக்கு பெருத்த அவமானத்தை கொடுத்த மணிரத்தினம்.. கமலுக்கு கிடைத்த கௌரவம்

பிரபு: 1982 ஆம் ஆண்டு சிவாஜி, பிரபு இருவரும் இணைந்து நடித்த சங்கிலி என்ற படத்தில் ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்ரீபிரியாவிற்கும் பிரபுவுக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகினர். இவர்கள் ஊர் சுற்றுவது எப்படியோ சிவாஜிக்கு தெரிந்து பஞ்சாயத்தாகி, கொல்ல கூட தயங்க மாட்டேன் என எச்சரித்து காதலர்களை பிரித்து விட்டார்.

சிவகுமார்: 70களில் முன்னணி நடிகராக இருந்த சிவக்குமார், ஸ்ரீபிரியாவுடன் பட்டிக்காட்டு ராஜா, ஆட்டுக்கார அலமேலு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருப்பார். அப்போது ஸ்ரீபிரியாவிற்கு சிவக்குமாரின் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. பிறகு அவர் பின்னாடியே ஸ்ரீபிரியா சுற்றி சுற்றி வருந்திருக்கிறார். ஆனால் அவர் விலகி போய்விட்டார்

Also Read: பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்.. கண்ணழகி மடியில் கவிழ்ந்து கிடந்த சின்ன தம்பி

கார்த்திக்: கார்த்தி, ராதா நடிப்பில் வெளியான நினைப்புகள் படத்தில் ஸ்ரீபிரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் லேடிஸ் விஷயத்தில் வீக்காக இருக்கும் நவரச நாயகன் கார்த்திக், ஸ்ரீ பிரியாவின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

இவ்வாறு இந்த 5 நடிகர்கள்தான் ஸ்ரீப்ரியா டாப் ஹீரோயின் ஆக வலம் வந்தபோது அவருடைய காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆனவர்கள். அதிலும் குறிப்பாக ஸ்ரீபிரியா மற்றும் பிரபு இருவரின் காதலை, சிவாஜி கண்டுபிடித்து மிரட்டி விட்டதுதான் ஹைலைட்.

Also Read: அவசரமாய் இத்தாலியில் இருந்து வரும் கமல்.. உலகநாயகனுக்கு தெரியாது அவங்க அப்படின்னு